ஆண்டுக்கு எவ்வளவு மழை பெய்யும்? கணித்து கூறும் அமானுஷ்ய கோயில் தெரியுமா?
சென்னை: ஒரு ஆண்டில் எவ்வளவு மழை பெய்யும் என்பதை கணித்துக் கூறும் அமானுஷ்ய கோயில் குறித்து பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த கோயிலில் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. அந்த அதிசயங்களுக்கான விடைகளும் பலராலும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஒரு அதிசயம் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அதிசயம்தான் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தைப் பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு ஊரில் உள்ள மக்கள் மழைக்காக வானத்தைப் பார்க்க மாட்டார்கள்.
மாறாக, அங்குள்ள கோயிலுக்குச் சென்று அறிவார்கள். ஆம், மழை வருமா? வராதா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோயில் உள்ளது. அது உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்திருக்கும் பகவான் ஜெகந்நாதர் ஆலயம்தான் அது.
சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலின் மேற்கூரையிலிருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது. சொட்டும் நீரின் அளவைப் பொறுத்து அந்த வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்கள் முன்பாகவே அந்தக் கோயிலின் உள்பகுதியில் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது. ஏழு நாட்களும் அந்த மழை நிற்பதே இல்லை. ஆனால், வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோயிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை.
அந்தக் கோயிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் அந்த ஊரில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஈரப்பதம் மட்டும் இருந்தால் மிதமான மழை பெய்யும், நீர் துளிர்த்து தரையில் விழுந்தால் கனமழை என்று அர்த்தம். இதற்கான காரணத்தை கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடையை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கு சொட்டும் நீரின் அளவைப் பொறுத்தே அந்த வருடத்தில் தங்கள் நிலத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கின்றனர். அதோடு, இந்தக் கோயிலில் உள்ள கடவுளுக்கு வருடா வருடம் சிறப்பு பூஜை செய்து அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications