Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அர்ச்சுனனின் அகந்தையை அடக்கிய தலம்! தடைகளை நீக்கி வளத்தை அளிக்கும் பகவதி அம்மன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அர்ச்சுனனின் அகந்தையை சிவபெருமானும் பார்வதி தேவியும் அகற்றிய தலம் எங்கிருக்கிறது தெரியுமா? இந்த கோயிலில் வழிபட்டால் தடையை நீக்கி வளம் பெருகச் செய்யும் என்பது ஐதீகம்.

இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், காடம்புழா, மலப்புரம் மாவட்டம், கேரள மாநிலம்.

spirtuality malapuram

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், காடம்புழா என்னும் இடத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது, இங்கு, பக்தர்களின் வாழ்வில் வரும் தடைகளை நீக்கி வளம் பெருகச் செய்யும், 'முட்டறுக்கல் வழிபாடு' எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், சிவபெருமானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காகத் தவமிருந்து கொண்டிருந்தான், சிவபெருமான், அவனுடைய தவத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும், அர்ச்சுனனுக்கு வில்வித்தையில் தன்னை விட உயர்ந்தவர் எவருமில்லை என்கிற கர்வம் இருந்ததால், அவனுக்குப் பாசுபத அஸ்திரத்தை வழங்கத் தயங்கினார், அதனை அறிந்த பார்வதி, 'அர்ச்சுனனின் அகந்தையை அகற்றி விட்டு, அவனுக்குப் பாசுபத அஸ்திரத்தை வழங்கலாம்' என்று சிவபெருமானிடம் சொன்னார்.

சிவபெருமான் வேடுவனாகவும், பார்வதி வேடுவப் பெண்ணாகவும் மாறி அங்கு வந்தனர், அதே வேளையில், அர்ச்சுனனின் தவத்தைக் கலைப்பதற்காகத் துரியோதனனால் அனுப்பப்பட்ட முகாசுரன், பன்றி உருவில் அங்கு வந்தான், வேடுவனாக வந்த சிவ பெருமான் அந்தப் பன்றியை நோக்கி அம்பு எய்தார். தவத்தில் இருந்த அர்ச்சுனனுக்கும் பன்றி வருவது தெரிய, அவனும் அந்தப் பன்றியை நோக்கி அம்பு எய்தான்.

இருவர் எய்த அம்புகளும் பன்றியின் உடலில் குத்தி இருக்க, 'அந்தப் பன்றியைக் கொன்றது யார்?' என்பது குறித்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வில்வித்தையில் பெயர் பெற்ற தன்னை விடுத்து, ஒரு வேடுவன் எப்படி அந்தப் பன்றியைக் கொன்றிருக்க முடியும் என்கிற கர்வத்துடன் அர்ச்சுனன், வேடுவ உருவில் இருந்த சிவபெருமானை நோக்கி அம்புகளைச் செலுத்தத் தொடங்கினான்!, அதனைக் கண்ட வேடுவப் பெண் உருவத்தில் இருந்த பார்வதிதேவி, அவன் எய்த அம்புகள் அனைத்தையும் சிவபெருமானின் உடலில் மலர்களாக மாறி விழச் செய்தார்! அப்போதுதான் அர்ச்சுனனுக்கு, வேடுவ உருவில் இருப்பவர்கள் சிவபெருமான், பார்வதி என்பது தெரிந்தது, உடனே அர்ச்சுனன், தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டி வணங்கினான்.

சிவபெருமானும் அவனை மன்னித்துப் பாசுபத அஸ்திரத்தை அவனுக்கு வழங்கினார்,அர்ச்சுனனுக்கு இறைவன் வேடுவன் உருவில் காட்சியளித்த தோற்றமே கிராதன் (வேடுவன்) தோற்றம் என்றும், இந்த வடிவில் இருக்கும் சிவபெருமானை 'கிராதமூர்த்தி' (வேடுவமூர்த்தி) என்றும், 'பாசுபதமூர்த்தி' என்றும் சொல்லி வழிபடுகின்றனர் என்று புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.

சிவபெருமானும், பார்வதிதேவியும் வேடுவர் உருவில் அந்தக் காட்டில் சில காலம் இருப்பதென்று முடிவு செய்தனர், அப்போது ஒருமுறை, பார்வதிதேவிக்குத் தாகம் ஏற்பட்டது. அதையறிந்த இறைவன், பூமியின் மீது அம்பை எய்து, கங்கை நீரை வரச்செய்து, இறைவிக்குக் கொடுத்துத் தாகம் தீர்த்தார், இந்நிகழ்வு நடந்த இடத்தை மலையாளத்தில் 'காடன் (வேடன்) அம்பு எய்த அழா (துளை)' என்றழைத்தனர். பின்னர், அந்தப் பெயர் 'காடம்புழா' என்று பெயர் மாற்றமடைந்து விட்டது என்கின்றனர்.

பிற்காலத்தில், ஒருமுறை ஆதிசங்கரர் இந்த வழியாகப் பயணம் செய்தார். அப்போது, அவருக்கு முன்பாக ஒரு தெய்வீக ஒளி தோன்றியது, ஆதிசங்கரர் அந்த ஒளியின் அருகில் செல்ல முயன்றார், ஆனால், அந்த ஒளி அங்கிருந்த துளை ஒன்றில் சென்று மறைந்தது, உடனே தியானத்தில் ஆழ்ந்த ஆதிசங்கரருக்கு, அந்த ஒளி வேடுவப் பெண் வடிவிலான பார்வதி தேவி என்பதும், அவள் அங்கு வந்ததன் வரலாறும் தோன்றி மறைந்தது, உடனே ஆதிசங்கரர், அத்துளையில் இருக்கும் இறைவியை அங்கேயே இருக்கச் செய்ய முடிவு செய்தார், அம்பாளின் வெப்பக் கடுமையைக் குறைத்திட, நரசிம்மம் மற்றும் சுதர்சன சக்கரத்தை நிறுவிப் பல்வேறு பூஜைகளைச் செய்தார், பின்னர், அந்தத் துளையின் மேல், பூ மூடல் பூஜையைச் செய்து, அம்பாளை அங்கேயே இருக்கச் செய்து வழிபட்டார் என்று இந்த ஆலயத்திற்கான தல வரலாறு சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+