திருப்பதி ஏழுமலையானை கூட்டத்தில் அடிபடாமல் மிதிபடாமல் தரிசிக்கணுமா? இந்த மாதங்களில் கிளம்புங்கள்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா, கூட்டம் இல்லாத மாதங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பதி என்றாலே முதலில் லட்டை விட நினைவுக்கு வருவது அங்கு வரும் கூட்டம்தான். எந்த நேரத்தில் போனாலும் திருப்பதியில் அலைமோதும். சிறியதாக வார விடுமுறை கிடைத்தாலும் கூட மக்கள் விரும்பி செல்லும் இடம் திருப்பதிதான்.

அதிலும் தகவல் தொழில்நுட்பம், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதாலும் வங்கி ஊழியர்களுக்கு எல்லா ஞாயிறுகளிலும் குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் விடுமுறை என்பதாலும் அவர்கள் குடும்பத்துடன் செல்லும் இடம் திருப்பதிதான்.
ஏழுமலையானை பார்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. கண் குளிர பார்த்தாலும் (ஜர்கண்டி சொல்லும் போது சட்டை செய்யாமல்) மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க சுவாமியை காணும் வினாடிகள் மிக மிக குறைவாக இருக்கும்.
சில நேரம் நிற்கக் கூட விடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். மணிக்கணக்கில் காத்திருந்து திடீரென நம்மை அரை நொடி கூட பார்க்க விடாமல் தள்ளி விடும் போது மனதிற்கு கஷ்டமாகவே இருக்கும். திருப்பதிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.
திருப்பதியில் மட்டும் எத்தனை கூட்டம் வந்தாலும் தேவஸ்தான நிர்வாகத்தினர் அதை சமாளிக்கிறார்கள். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் பல மாதங்களுக்கு முன்பே காத்திருந்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு சென்றாலும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
எப்பதான் திருப்பதியில் கூட்டம் குறையும் என கேள்வி நமக்குள் எழும். எல்லாவற்றையும் விட "அது ஏன்டா ஆவுன்னா லீவு விட்டா திருப்பதிக்கு வந்துடறீங்க"ன்னு சிலர் திருப்பதியில் இருந்தே மனதிற்குள் கேட்பதுண்டு. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய சிறந்த மாதம் என்றால் பிப்ரவரியும், நவம்பரும்தான்.
இந்த மாதங்களில் மிதமான தட்பவெப்பநிலை நிலவும் என்பதால் இது பக்தர்களுக்கு நல்லதொரு உணர்வை ஏற்படுத்தும். கோடை விடுமுறையில் கூட்டம் அலைமோதும் சுவாமி தரிசனம் செய்யவே ஒன்றரை நாட்கள் ஆகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை (புரட்டாசி தொடங்காத வரை) பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும்.
இதனால் அந்த மாதங்களில் திருப்பதி சென்றால் விரைவாகவும் நிம்மதியாகவும் சுவாமி தரிசனம் செய்யலாம். அது போல் ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். எனவே திருப்பதிக்கு அந்த பண்டிகையின் போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்கள் வரமாட்டார்கள். எனவே விநாயகர் சதுர்த்தியின் போதும் கூட்டம் குறைவாக இருக்கும். அது போல் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது திருப்பதியில் கூட்டம் குறைவாக இருக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications