400 ஆண்டுகளாக காத்திருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள்.. பிரம்மோற்சவம் எப்போது?
சிதம்பரம்: 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரமோற்சவம் நடைபெறாமல் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு விரைவில் பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடராஜர் கோவிலுக்குள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. இந்த இரு கோவிலின் கருவறையும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பெருமாளையும் சிவனையும் ஒரே நேரத்தில் வழிபடும் வகையில் அமைந்துள்ளதால், உலக நாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தக் கோவிலுக்கு சிவ பக்தர்கள் மற்றும் வைணவ சமய பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒரு நாளைக்குப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடைபெற்ற நடனப் போட்டிக்கு தீர்ப்பு சொல்லும் சபையில் திருமால் இருந்தபோது, அவருக்கு மரியாதை தரும் விதமாக இத்தலத்தில் பிரம்மதேவர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தைப் பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பு.
கோவிந்தராஜப் பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 40-வது திவ்ய தேச தலமாகப் போற்றப்படுகிறது. ஹரியும், சிவனும் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் அரிதான சில கோவில்களில் இதுவும் ஒன்று. குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடி உள்ளனர். சைவ மதமே பிரதானமாக விளங்க வேண்டும் என எண்ணிய இரண்டாம் குலோத்துங்க சோழன், இந்த தலத்தில் இருந்து பெருமாள் சிலையை அகற்ற உத்தரவிட்டான். அதன் பிறகு 16 ம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கர் தான் தற்போதுள்ள கோவிந்தராஜர் விக்ரஹத்தை மீண்டும் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை திருவிழா மற்றும் கஜேந்திர மோட்ச விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்தக் கோவிலில் பிரமோற்சவம் நடத்துவதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் எனப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதர்சனம், திருவேங்கடம் மற்றும் தெய்வீக பக்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா உள்ளிட்டவர்கள் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மனு அளித்தனர். 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரமோற்சவம் நடைபெறாமல் உள்ளதை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரன் கோவில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் ராஜ்குமார், ஆய்வாளர் நரசிங்க பெருமாள் மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாக உறுப்பினர்கள், தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், '400 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் பிரமோற்சவம் நடைபெறவில்லை என அனைத்து தரப்பினர் தரப்பிலிருந்தும் புகார் வருகிறது என்றும் இதனை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. எனவே விரைவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம் நடத்தப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கனகசபை ஏறி பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை விதித்த காரணத்தால் தீட்சிதர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் மோதல் நீடித்து வருகிறது. தற்போது பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டால் அதனை தீட்சிதர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மார்கழி திருவாதிரை திருவிழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரம்மோற்சவ விழா எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பிற்காக வைணவர்கள் காத்திருக்கின்றனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications