வீட்டு பூஜை அறையில் வாழைப்பழத்தில் ஊதுபத்தியை சொருகி வைக்கிறீர்களா?
சென்னை: வீட்டு பூஜை அறையில் சுவாமிக்கு வைக்கும் வாழைப்பழத்தில் ஊதுபத்தியை சொருகி வைக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் தேங்காய் உடைத்த போது சிதறி விட்டால் அதை சுவாமிக்கு வைக்கக் கூடாது என்ற ஒரு பழக்கமும் இருக்கிறது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: வீட்டு பூஜையின் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்துக்கள் வீட்டில் கட்டாயமாக பூஜை அறை இருக்கும். அப்படியாக பெரும்பாலும் வீடுகளில் தினமும் காலையில் முடியாவிட்டாலும் மாலையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது உண்டு.

அந்த வகையில் நமக்கே தெரியாமல் நாம் அறியாமல் பூஜை அறையில் செய்யும் சிறு சிறு தவறுகள் பற்றியும் அதை எப்படி மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
நம்மில் சிலர் பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசும் வழக்கம் வைத்து இருக்கின்றோம். அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும். அதாவது தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
சிலர் இடமின்மை காரணமாக பூஜை அறையில் தெய்வப் படங்களை வடக்குப் பார்த்து வைத்திருப்பார்கள். அவ்வாறு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் வீட்டிற்கு சாபமுண்டாக நேரிடும்.
மேலும், ஒருவர் விரதம் மேற்கொள்ளும் பொழுது தாம்பூலம் தரித்தல், பகலில் உறங்குதல், வீட்டில் சண்டை போடுதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
நாம் நிறைய பேர் பூஜையில் வைக்கும் வாழைப்பழத்தில் ஊதுபத்தியை சொருகி வைப்பது உண்டு. அவ்வாறு வாழைப்பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது. தேங்காய் உடைத்து பூஜைக்கு வைக்கும் பொழுது இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக் கூடாது.
விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. பூஜை செய்யும் பொழுது ஈர உடையுடனும்,பெண்கள் தலை முடியை விரித்தவாறும் தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டு வழிபாடு செய்யக்கூடாது.
சுப்ரபாதம் என்பது காலையில் கேட்கும் பாடல் ஆகும் .தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது தவறானதாகும். கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கை ஏற்றுவதற்கு முன்னால் வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை மூடி விட வேண்டும். புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக் கூடாது.
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைக்க வேண்டும். பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications