திருவண்ணாமலை தீபம்..11 நாட்கள் மலை மீது ஒளிர்ந்த ஜோதி.. மை வடிவில் வீடு தேடி வரும் பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தீப திருவிழா திருவண்ணாமலையில் நிறைவடைந்துள்ளது. 11 நாட்கள் மலை உச்சியில் ஒளிர்ந்த தீபம் குளிர்விக்கப்பட்டதை அடுத்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு அருணாச்சலலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப கொப்பரையில் உள்ள மை ஆருத்ரா தரிசன நாளில் மை ஆக நடராஜரின் நெற்றியில் காட்சி தர உள்ளது. பக்தர்களுக்கு மை வடிவத்தில் வீடு தேடி வரப்போகிறார் இறைவன்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் நிறைவாக கடந்த 6ஆம் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக 5ஆம் தேதியே கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகை பவுர்ணமி நாளில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

11 நாட்கள் ஒளிர்ந்த தீபம்

11 நாட்கள் ஒளிர்ந்த தீபம்

கடந்த 6ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தீப திருவிழாவில் பங்கேற்கவும் தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தது. தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

தீப கொப்பரை

தீப கொப்பரை

இன்று காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். தொடர்ந்து வருகிற ஜனவரி 6ஆம் தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீப மை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

தீப மை பிரசாதம்

தீப மை பிரசாதம்

அதன்பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கொப்பரையில் உள்ள மையை பயன்படுத்தி ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு திலகமிடப்படும் என்றும் நெய் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு கொப்பரை மை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+