Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்டால் சிணுங்கியை தொட்டு வணங்கினால் கோடி நன்மை.. கணவன், மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்.. இதுதான் திசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் அமைதியும், ஒற்றுமையும், ஆரோக்கியமும், செல்வமும் தவழ வேண்டுமானால் ஒருசில வகையான வாஸ்து செடிகளை வளர்க்க அறிவுறுத்துகின்றன சாஸ்திரங்கள்.. அந்தவகையில், தம்பதிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை தழைக்க செய்யும் அற்புத செடிதான் தொட்டல் சிணுங்கி.. இந்த செடிகளை வளர்ப்பதால் வீட்டில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? எப்படி வளர்க்க வேண்டும்? என்பதை பற்றியெல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

யாராவது விரல்களில் தொட்டாலே மூடிக்கொள்ளும் இந்த தொட்டால் சிணுங்கி இலைகள்.. , சிறு அதிர்வு வந்தாலும், மறுபடியும், இலைகளை மூடிக்கொள்ளுமாம். இப்படி தொட்டாலே உடலில் கரண்ட் பாயும் அளவுக்கு காந்தி சக்தி கொண்டது.

thottal chinungi vastu thottal sinungi

மருத்துவ நன்மைகள்

இந்த தொட்டால் சிணுங்கி சிறப்பு வாய்ந்த மருத்துவ குணம் நிறைந்த மரமாகும்.. சரும வியாதிகள், நீரிழிவு பாதிப்பு, சிறுநீர் கோளாறுகள் போன்றவைகளை தீர்க்க உதவுகிறது..

சருமத்தில் தடிப்புகள், பூஞ்சை தொற்று, வீக்கம், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க தொட்டால் சிணுங்கி சாறுதான் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது... காரணம், இந்த செடியானது, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெற்றுள்ளது.. எனவே, சருமத்தை பாதிக்கக்கூடிய தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.

சர்க்கரை நோயாளிகள்

தொட்டால் சிணுங்கியின் இலை மட்டுமல்ல வேர்கள்கூட மருத்துவ நன்மைகள் கொண்டது.. இந்த வேரினை சுத்தம் செய்து கழுவி, கஷாயம்போல வைத்து குடிக்கும்போது, நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் கடுப்பு போன்றவை சீராகும்.. எனவே, கிட்னி தொடர்பான கோளாறுகளை சரி செய்யவும் இந்த செடியே உதவுகிறது. இதனால் வயிற்று புண்களையும் ஆற்ற முடியும்.

இந்த தொட்டால் சிணுங்கி ஒரு காந்த சக்தி இருப்பதாகவும், இதன்மூலம் உள் ஆற்றல் பெருகுவதாகவும் சொல்லப்படுகிறது.. எனவேதான் வாஸ்து சாஸ்திரத்திலும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது..


உரிய திசை எது

அதுமட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்தில், தொட்டால் சிணுங்கி செடி மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. எப்போதுமே இந்த செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது.. செடியை வைத்திருப்பது மட்டும் போதாது, தினந்தோறும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்... இதனால் மூலம், ராகு தோஷம் இருந்தால் நீங்கும், குடும்பத்திலுள்ள இன்னல்களும் மெல்ல குறையும் என்பார்கள்..

தொட்டாச்சிணுங்கி செடியை வீட்டில் வளர்த்து வருமபோது, உறவுகளிடம் குறிப்பாக, தம்பதியிடம் ஒற்றுமையை அதிகரித்து அவர்களுக்குள் அன்னோனியம் கூடுமாம்.. கருத்து வேறுபாடு கணவன்-மனைவிக்குள் நிலவினாலும், அந்த மனக்கசப்பை போக்கக்கூடிய தன்மை இந்த செடிக்கு உள்ளதாம்..

அதிக சம்பளத்தில் வேலை

அந்த தொட்டிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.. மேலும் ஊதிபத்தியும் காட்ட வேண்டும்.. அதிலும் தம்பதிகள் சண்டையிட்டு பிரிந்திருக்கும் சூழலில் இப்படி பூஜித்து, மனமார வேண்டிக் கொண்டால், விரைவில் தம்பதிகள் இணக்கமாகிவிடுவார்களாம்.

அதேபோல, அதிகமான சம்பளம் கிடைக்கக்கூடிய வேலை கிடைக்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள், இந்த தொட்டாசிணுங்கி செடியை 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு பிரார்த்தித்து வரலாம்.. வேலை என்றில்லாமல் எந்தவிதமான கோரிக்கையையும் இந்த செடியை தொட்டு மனதார பிரார்த்திக்கும்போது, அது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

இந்த அறையில் மட்டும் வேண்டாம்

அதேபோல கடன் தொல்லை தீர்வதற்கான சில பரிகாரங்களிலும் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது.. மொத்தத்தில் இல்லறம் நல்லறமாக உதவுவதே இந்த தொட்டால் சிணுங்கி வாஸ்து செடியாகும்.

இந்த செடியை எக்காரணத்தை கொண்டு படுக்கையறையிலோ, படுக்கையறைக்கு பக்கத்திலோகூட வைத்துவிடக் கூடாது.. அப்படி வைத்தால் வீட்டில் தீய விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.. அத்துடன் தூக்கமும் பாதிக்கப்படலாம்.. எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+