அன்புன்னா கால்ல விழுந்துருவாங்க.. துலாம் ராசிக்காரர்களின் சூப்பர் குணம்.. இவங்க ஸ்பெஷாலிட்டியே இதான்
சென்னை: தீராத பிரச்சனையையும் நொடியில் தீர்த்து வைக்கக்கூடியவர்கள் துலாம் ராசிக்காரர்கள்.. நீதி, நேர்மையுடன் வாழ்க்கையை நடத்த விரும்பக்கூடியவர்கள்.. இவர்களின் அற்புதமான குணநலன்கள் என்னென்ன? பொதுப்பலன்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
துலாம் என்பது காற்று ராசியாகும்.. அதாவது காற்று போல, எல்லாரிடத்திலும் தன்மையாக பழகக்கூடியவர்கள். அடுத்தவர் துன்பப்பட்டால் தாங்கி கொள்ள மாட்டார்கள். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். துளியும் ஈகோ இல்லாதவர்கள். அகம்பாவம், ஆணவம் இல்லாதவர்கள்.

இவர்களிடம் உள்ள ஸ்பெஷாலிட்டியே அவர்களது பேச்சுத்திறன்தான்.. எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் அசால்ட்டாக தீர்ப்பார்கள்.. யாராவது 2 பேருக்கு சமரசம் செய்ய வேண்டுமானால், துலாம் ராசிக்காரரை அழைத்தால் போதும்.. பிரிந்த எதிரிகளும் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள்.
சுறுசுறுப்பு கொண்டவர்கள்: எப்போதுமே சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர்கள் துலாம் ராசியினர்.. பாசிட்டிவ் விஷயங்களை பேசுபவர்களை கண்டால் இவர்களுக்கு பிடிக்கும்.. யாராவது, ஆபாசமாக பேசினால், துர்வார்த்தைகளை கொட்டினால் அவர்களிடமிருந்து விலகிவிடுவார்கள்..
அனைவராலும் கவர்ந்திழுக்கும் தோற்றம் உடையவர்கள். அழகான தோற்றத்தை போலவே, பேச்சிலும் மென்மையை கொண்டிருப்பார்கள். அதனால் எதிர்பாலின ஈர்ப்பு இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.. இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர்கள் என்பதால், சற்று குரலை உயர்த்தி பேசினாலும் இவர்களுக்கு பிடிக்காது.
சுக்கிர திசை: மிகவும் நேர்மையானவர்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டாலும், அதற்காக கவலைப்பட மாட்டார்கள்.. தன்னை மற்றவர்கள் கவனிக்கும்படியாகவே நடந்து கொள்வார்கள்.. சொகுசாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மிகப்பெரிய காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பர். அதிலும், சுக்கிர திசை நடக்கும்போது, இவர்கள் பெரிய சாதனையையே செய்துவிடக்கூடும்.
காதல் என்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், காதலில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். காதல் வாழ்க்கை இவர்களுக்கு இயல்பாகவே அமையும்.. வாழ்க்கையை ரசனையுடன் வாழ்வார்கள்.. துலாம் ராசிகாரர்கள் தங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ தேர்ந்தெடுப்பதில் திறமைசாலிகள்.
கலகல சூழல்: நண்பர்கள், சுற்றம் சூழ மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்படுவார்கள்.. இதற்காகவே நேரத்தை செலவிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதால், இவர்கள் எங்கு இருந்தாலும், அந்த இடம் கலகலவென இருக்கும். யாராவது தவறான வழியில் சென்றால், அவர்களுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்வார்கள். தூய்மையான அன்பை இவர்களிடம் பொழிந்தால், வாழ்நாள் முழுக்க உங்களை மதிப்பார்கள்...
சுயமாக சிந்திக்க தெரியாமல், மற்றவர்கள் சொல்வதை கேட்டும் நடப்பர். இதனால் உடனிருப்பவர்களாலேயே நம்பி ஏமாறும் நிலைமையும் வரும்.. அதேபோல அழகைக் கண்டு ஏமாறும் வாய்ப்பும் உண்டு.
இவர்களுக்குள் ஒரு சமூக அக்கறை இருந்து கொண்டே இருக்கும். துலாம் ராசியில் பிறந்த பெண்களாக இருந்தாலும், நீதி, நேர்மை, நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.. அநீதிக்கு எதிராக பொங்குவார்கள்... இதனால் தனக்கு ஏற்படும் கெட்ட பெயர்களைவட கண்டுகொள்ள மாட்டார்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள்..
கிரகங்கள்: துலாம் ராசிக்காரர்கள் இலக்கியம், சங்கீதம், இயக்கம், தயாரிப்பு, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து பயிலலாம். நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள். எனினும், மற்ற கிரகங்களை பொருத்து உடல் நிலையில் மாற்றம் ஏற்படலாம்.. குறிப்பாக, கணையம், சிறுநீரகம், வாய் போன்றவற்றில் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கல் வைரம் ஆகும்.












Click it and Unblock the Notifications