திருப்பதி ஏழுமலையானுக்கு சேவை.. உண்டியல் காணிக்கை எண்ண விருப்பமா?.. அப்ளை பண்ணுங்க
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024 பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் தன்னார்வலர்களாக சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 27ஆம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே ஏழுமலையான் தரிசனம் கிடைக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர்.

விரைவு தரிசனத்திற்காக 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். 4 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் இணைய தள பக்கத்தில் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சணம், கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் தேதி வெளியான நிலையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் நாளைய தினம் வெளியிடப்பட உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகளும் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 அன்று நடைபெறும் ரதசப்தமிக்காக தன்னார்வலர்களாக ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்வதற்கான முன்பதிவு இந்த மாதம் 27ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். இதற்காக 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த தன்னார்வலர் சேவையில் பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.
இதேபோல், 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க இந்த மாதம் 27 அன்று மதியம் 12 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்கான தன்னார்வ சேவைக்காக வெளியிடப்படும்.
அதே நாளில் மாலை 3 மணிக்கு உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்வதற்காக www.tirumala.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications