திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசனம் செய்ய வேண்டுமா? ஆன்லைனில் நாளை டிக்கெட் வெளியீடு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள், சேவைகளுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள், உற்சவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முன்பதிவு செய்ய நாளை ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் எத்தனை மணிக்கு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்கிற விவரத்தை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. ரூ 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் இந்த மாதம் தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அது போல் சேவை டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும். இந்த டிக்கெட்டுகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை முன் பதிவு செய்யலாம்.
குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஜூன் 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்கு முன்பு பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இது போன்று செப்டம்பர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இந்த சேவைகளுக்கு பக்தர்கள் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் விர்சுவல் சேவைகளுக்கான டிக்கெட் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் செப்டம்பர் மாதம் அங்கபிரதட்சணம் டோக்கன்கள் வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
ரூ.300 சிறப்பு நுழைவுச் தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருமலை - திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் அறைகள் முன்பதிவு செய்ய அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications