பணக்கார சாமி.. திருப்பதி ஏழுமலையானுக்கு தங்கம்.. வைரம்.. இத்தனை கோடி சொத்துக்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவில் நிகர சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏழுமலையான் பெயரில் 11,225 கிலோ தங்கம் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானின் ஆண்டு வருமானம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாகும்.

இந்தியாவின் பணக்கார கடவுள் ஏழுமலையான் கோவில். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

Tirumala Tirupati Devasthanams Property: Lord Venkateswaras properties are worth Rs 3 lakh crore

கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலை தேவஸ்தான நிர்வாகம்தான் கவனித்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் நிகர சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சொத்து மதிப்பை முறியடித்து திருப்பதி தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்பீட்டளவில், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிறுவனங்களின் சந்தை மூலதனம் 2.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம் திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி , ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 14 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையைக் கருத்தில் கொண்டு, கணக்கிடப்பட்டதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தற்போதைய நிகர மதிப்பு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானின் ஆண்டு வருமானம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் ஆண்டு வருமானத்தை விட அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. சச்சின் டெண்டுல்கரின் ஆண்டு வருமானம் 1,300 கோடி ரூபாய் ஆகும். விராட் கோலியின் ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் அவர்களை முந்தியுள்ளார் திருப்பதி ஏழுமலையான். திருமலையில் உள்ள ஏழுமலையானின் உண்டியல் ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டுகிறது.

வருவாய் ஆதாரங்களில் நேரடி காணிக்கைகள், பக்தர்களின் முடி நன்கொடைகள், நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி மற்றும் தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு வரும் நன்கொடைகள் ஆகியவையும் அடங்கும். திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி, அறிவித்ததன்படி ஏழுமலையான் பெயரில் 11,225 கிலோ தங்கம் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மூலவர் ஏழுமலையானின் தங்க ஆபரணங்கள் 1088.62 கிலோ எடையும், வெள்ளி ஆபரணங்கள் 9071.85 கிலோ எடையும் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவிலின் அசையா சொத்துக்களாக 6,000 ஏக்கர் வன நிலம், 75 இடங்களில் 7,636 ஏக்கர் சொத்துக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நிலங்களும் இவற்றில் அடங்கும். இந்தியா முழுவதும் 71 கோவில்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து செயல்படுகின்றன.

பிற சொத்துக்களும் தேவஸ்தானத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் குத்தகை சொத்துக்கள் மூலம் ஆண்டு வருமானமாக 4 கோடி ரூபாய் கிடைக்கிறது. மேலும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக 307 இடங்களில் கல்யாண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் 29 மண்டபங்கள் அறநிலையத் துறைக்கு குத்தகைக்கு விடப்பட்டது மற்றும் 166 மண்டபங்கள் மற்றவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குத்தகை மண்டபங்கள் மூலம் ஆண்டு வருமானம் 4 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் 97 மண்டபங்களை இயக்கி வருகிறது. மேலும் பக்தர்களிடம் இருந்து 1,021 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையும் சூட்சமான கிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. நாம் ஒவ்வொருமலையும் ஏறி இறங்கும் போது தோஷம் பாவங்கள் நீங்கி விடும். திருப்பதி வெங்கடாசலமும்,மகா லட்சுமியும் சர்வ ஐஸ்வர்யம் தருவார் பத்மாவதி தாயார் வாழ்வில் அனைத்து வசதியும் தருவார்.

ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம். சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி. அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது. ஏழுமலையானை தரிசனம் செய்பவர்களுக்கு கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும். ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+