திருப்பதிக்கு அக்டோபர் மாதம் செல்ல திட்டமா? ஆதார் கார்டுடன் 10 மணிக்கு ரெடியா இருங்க!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதிக்கு அக்டோபர் மாதம் செல்வதற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸ் செய்கிறது. அது போல் இன்று மாலை 3 மணிக்கு திருமலை, திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவும் தொடங்குகிறது.

https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மாதந்தோறும் 24 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

tirupati spirtuality tirumala

இல்லாவிட்டால் திவ்ய தரிசனம் எனும் நடைபாதை வழியாகவோ இலவச தரிசனம் மூலமாகவோ ஏழுமலையானை தரிசிக்கலாம். ரூ 300 சிறப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆதார் கார்டு எண், வயது,பாலினம், பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்வது அவசியம்.

இல்லாவிட்டால் போனில் உள்ள TTD Devasthanam செயலி மூலமாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால் இன்டர்நெட் விரைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட்டுகள் முடிந்துவிடும். அது போல் ரூ 300 தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டும், திருமலை, திருப்பதியில் அறைகளை முன்பதிவு செய்ய மாலை 3 மணிக்கு புக்கிங் தொடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+