திருப்பதி ஏழுமலையானை ஜூன் மாதம் தரிசிக்க சூப்பரான வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஜூன் மாதம் முழுக்க பக்தர்கள் தரிசனம் செய்ய சூப்பரான சான்ஸ் உள்ளது. எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் பணக்கார கடவுள் ஏழுமலையான் கோவில். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுகின்றனர்.
இந்த கோயிலில் தினமும் சிறப்பு தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் குவிந்து வருகிறது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறையையொட்டி திருமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
ஒரு நாள் முழுவதும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் திருமலையில் நடக்கும் சிறப்பு திருவிழாக்கள் குறித்த விவரங்களை திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் உள்ள ஆகாசகங்கை, அஞ்சனாத்திரி, பால ஆஞ்சநேயசுவாமி கோயில்களில் ஜூன் 1 முதல் 5ஆம் தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 2ஆம் தேதி மஹி ஜெயந்தியும் ஜூன் 19 முதல் 21 ஆம் தேதி வரை ஜ்யேஷ்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
பால ஆஞ்சநேய சுவாமி கோயிலில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை காலை 8.30 மணி முதல் 10 மணி வரை அபிஷேகம் நடக்கிறது. முதல் நாள் மல்லிகை அபிஷேகம், இரண்டாம் நாள் வெற்றிலை, மூன்றாம் நாள் ஏற்றக்கண்ணேறு, கனகாம்பரம், நான்காம் நாள் சாமந்தி, ஜூன் 5 இல் குங்குமப்பூ ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மேலும் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை ஹனுமன் சாலீசா பாராயணம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டியக் கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இவையெல்லாமே பக்தர்கள் மத்தியில் நடைபெறுகிறது.
ஜூன் 20 ஆம் தேதி ஸ்ரீநாதமுனுல வர்ஷ திரு நட்சத்திரமும், ஜூன் 22ம் தேதி பௌர்ணமி கருடசேவையும் நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நாட்களை கருத்தில் கொண்டு நீங்கள் திருப்பதிக்கு டிக்கெட் போட்டால் சிறப்பு தரிசனம் செய்யலாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications