திருத்தணிக்கு போறீங்களா? இன்று முருகன் கோயில் நடை 4 மணி நேரம் மூடல்! கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் இன்று 4 மணி நேரம் மூடப்படுகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு இந்த நடை சாற்றுதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை தரிசிக்கிறார்கள்.

இதே ஏதாவது பண்டிகை என்றால் அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் முருகனை தரிசிப்பார்கள். பக்தர்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடர்ந்து கோயில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் திங்கள்கிழமையான இன்று ஆவணி அவிட்டம் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முருகன் கோயில் நடை திறக்கப்படாது என்றும் மூடியே இருக்கும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே இந்த 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அந்த நேரத்தில் கோயிலில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும் தலைமை குருக்களும் பூணூல் மாற்றிக் கொள்வார்கள். எனவே மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் இரவு 8.45 மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம். இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications