திருவண்ணாமலை ஆவணி பவுர்ணமி கிரிவலம்.. புதன்கிழமை கிரிவலத்திற்கு இத்தனை சிறப்புகளா?
திருவண்ணாமலை: ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல நல்ல நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமியையொட்டி நாளைய தினம் 30 ஆம் தேதி சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தவிர பழநி, திருப்பரங்குன்றம், திண்டுக்கல், ரத்னகிரி, சோளிங்கர், வள்ளிமலை, பர்வதமலை, சென்னிமலை, திருமயம் என இப்படி மலைகள் இருக்கும் பல இடங்களிலும் கிரிவலம் செல்லும் வழக்கம் உள்ளது. எங்கெல்லாம் மலை உள்ளதோ, மலை மீது ஆலயம் உள்ளதோ அதை முழுவதுமாக வலம் வந்து அந்த மலை மீதுள்ள தெய்வத்தை வணங்கினால் கிரிவலம் வந்த முழு பலனையும் அடைய முடியும்.

ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி (புதன்கிழமை) வருகிறது. 30-ந் தேதி காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பவுர்ணமியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 30ஆம் தேதி சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.
இறைவன் அருளை வேண்டுவோர் அமாவாசையிலும், பொருளை வேண்டுவோர் பெளர்ணமியிலும் கிரிவலம் செல்லலாம் என்றொரு வாக்கு உண்டு. அதனால் சிவனின் அருளை மட்டுமே பரிபூரணமாக பெற வேண்டும் என நினைப்பவர்கள் அமாவாசை நாளில் கிரிவலம் செல்லலாம். நினைத்த காரியத்தை நிறைவேற்றி, வெற்றியை தரக்கூடியது அமாவாசையில் செல்லும் கிரிவலம்.
புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும். இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்ம குருமார்களின் ஆசியும் கிடைக்கும் எனவே ஆவணி பௌர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் சகல நன்மையும் சிறப்புகளும் தேடி வரும்.












Click it and Unblock the Notifications