Thai Amavasya 2025: இன்று தை அமாவாசை! காலை 8 மணிக்கு ரொம்ப முக்கியம்! தர்ப்பணம் எப்போது கொடுக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை அமாவாசை இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இந்த நாளில் பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். அமாவாசை நாளில் பெண்கள் தனது தாய், தந்தைக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா என்பதையும் பார்க்கலாம்.

மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் அதில் முக்கியத்துவம் வாய்ந்தது தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகியவை ஆகும். அதிலும் மற்ற இரண்டை விட தை அமாவாசை மிகவும் சிறப்பானது என்கிறார்கள்.

thai amavasai

இன்று தை அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. ஜனவரி 28ஆம் தேதியான நேற்று இரவு 8.10 மணிக்கு தொடங்கி ஜனவரி 29ஆம் தேதி இரவு 7.21 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அது போல் ஜனவரி 29ஆம் தேதி காலை 9.21 மணிக்குத் தொடங்கி ஜனவரி 30ஆம் தேதி காலை 8.59 மணி வரை பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும் வருகிறது.

பெருமாளை நினைத்து பிண்ட தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காலை 6 - 7.20 மணி வரையும் காலை 9 முதல் 11.55 மணி வரையும் தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நேரங்கள் ஆகும். இந்த நேரத்திற்கு முன்னதாக குளித்துவிட்டு ஆகாரம் ஏதும் அருந்தாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

திருவோண நட்சத்திர காலத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்கு உகந்த நேரம் 9.21 முதல் 11.55 வரை ஆகும். இந்த தை அமாவாசை காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். அமாவாசை நாட்களில் இறந்த தனது தாய், தந்தைக்கு பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

அது போல் பெண்கள் அமாவாசை நாட்களில் விரதம் இருக்கலாமா என்ற கேள்வியும் எழும். இதற்கான விளக்கத்தை பார்க்கலாம். பொதுவாக அமாவாசை நாட்களில் ஆண்கள் விரதம் இருந்து மறைந்த தனது தாய், தந்தையருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். ஆனால் பெண்கள் விரதம் இருக்கவே கூடாது.

சுமங்கலி பெண்கள் மறைந்த தனது தாய், தந்தைக்காக தர்ப்பணம் கொடுப்பதோ எள்ளும் தண்ணியும் இறைப்பதோ கூடவே கூடாது. வாசலில் கோலமிடக் கூடாது. வீட்டை சுத்தப்படுத்தக் கூடாது. வீட்டில் விளக்கை சுத்தம் செய்வது, எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆகியவற்றை செய்யக் கூடாது.

அமாவாசை விரதத்திற்கு உணவு சமைக்கும் பெண்கள் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. அது போல் குளிக்காமல் இருக்கவும் கூடாது. பெண்கள் சமைக்கும் போது வாழைக்காய், பாகற்காய், பிரண்டை, பலாக்காய் உள்ளிட்டவைகளை சமைக்க வேண்டும். மேற்கண்ட 4 காய்கறிகளை சமைத்தால் 1008 காய்கறிகளை சமைப்பதற்கு சமம். விரதம் இருப்போர் சாப்பிட்டு முடித்ததும்தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் சாப்பிட வேண்டும்.

28-ஆவது நட்சத்திரமாக இருக்கும் இந்த சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரத்தை மனிதர்களிடம் கொடுத்தால், அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக கிருஷ்ண பரமாத்மா, இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் ஒளித்து வைத்ததாக நம்முடைய சாஸ்திரத்தில் உள்ள புராணக் கதைகள் சொல்லுகிறது. உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு இடைப்பட்ட 20 நிமிட காலத்தைத் தான் அபிஜித் நட்சத்திர நேரம் என்று சொல்கின்றோம்.

ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை காலை 8:08 மணியிலிருந்து 8:32 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கிருஷ்ண பரமாத்மாவை மனதார நினைத்து உங்களுடைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+