கோலாகலமாக நடந்த திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்! ஓம் சக்தி, பராசக்தி என கோஷம்
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என கோஷமிட்டனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த வகையில் நேற்று சித்திரை மாதம் பிறந்தது. இன்றைய தினம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் தேரோட்ட விழா நடத்த கடந்த 6ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி தினமும் உற்சவர் அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்டவைகளில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வீதியுலா வந்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்வு நடந்தது.
இந்தநிலையில் இன்றைய தினம் தேரோட்டம் நிகழ்ந்தது. காலை 10.31 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அப்போது மேளதாளங்கள் முழங்கி அதிர்வேட்டுகள் ஒலித்தன. காலை 11.30 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டது விண்ணை அதிரும் அளவுக்கு இருந்தது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரத்திற்கு பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி பால்குடம் எடுத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி மருத்துவ முகாம்கள், குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரோட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க 2000 -க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூட்டத்தை போலீஸார் கண்காணித்தனர்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
ஏலக்காய்–கிராம்பு மாலை வழிபாடு: மகாலட்சுமி அருளைப் பெறும் எளிய பரிகாரம் -
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
கொடிமரம் முதல் கருவறை வரை: கோயிலில் பலிபீடத்தின் முக்கியத்துவமும் வணங்கும் முறையும்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications