ஓயாத சண்டையா? எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் இந்த பொருள் போதும்...மாயமாகும் மன அழுத்தம்
சென்னை: சிலருக்கு உடல்நலக்கோளாறுகள் படுத்தி எடுக்கும், சிலருக்கு எல்லாமே தடங்கலாக இருக்கும். வறுமையும் பஞ்சமுமாக இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது. செல்வம் பெருகவேண்டும், கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்கி நல்லது நடக்க வேண்டும் வறுமை நீங்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். சிலரது வீட்டில் நோய்களும், கடனும் படுத்தி எடுக்கும், சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணமே தங்காது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இதனால் மனச்சோர்வும் அழுத்தமும் இருக்கும். அதற்கேற்ற பரிகாரம் செய்தால் மன அழுத்தம் மாயமாகும் நோய்கள் நீங்கி சுகம் அதிகரிக்கும்.
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம். துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை அடிக்கடி வந்து கொண்டே இருந்தால் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். அந்த தண்ணீரை காலையில் மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.

கல் உப்பு
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் படுக்கை அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை பயமின்றி நன்றாக தூங்கும். கல் உப்பு அற்புதமான பொருள் உடல் வலி, கண் திருஷ்டியால் தேவையற்ற சோர்வு ஏற்பட்டால் குளிக்கும் தண்ணீரில் கல் உப்பு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் சோர்வும், மன அழுத்தமும் நீங்கும்.

பயம் நீங்க பரிகாரம்
காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருந்தால் ஆணோ , பெண்ணோ வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டலாம். பயம் குறையும். தற்கொலை எண்ணங்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளிக் கம்பியால் மூக்கில் சிறு துளை போடலாம் அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை. பெண்கள் மூக்குத்தி அணியலாம்.

சண்டை சச்சரவு நீங்க
சிலருடைய வீடு போர்க்களமாக இருக்கும். ஏன்தான் வீட்டிற்கு வருகிறோமோ என்ற எண்ணம் வரும் அளவிற்கு குருஷேத்ரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஓயாத சண்டை வரும். சமையலறையும், படுக்கையறையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒரே மெத்தையாக தான் பயன்படுத்த வேண்டும். மனைவி கணவனின் இடது பக்கம் படுத்து உறங்க வேண்டும்.

விபத்துகளில் இருந்து தப்பிக்க
சிலர் அடிக்கடி விபத்தில் சிக்குவார்கள். வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் சிறிது வேப்பிலை சிறிது மஞ்சள் எடுத்து செல்ல அதில் உள்ள பாசிட்டீவ் எனர்ஜியால் எந்த விபத்தும் இன்றி பயணம் இனிமையானதாக இருக்கும்.வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது. எலுமிச்சம்பழத்தை உங்களின் ஹேண்ட் பேக்கில் போட்டு எடுத்துச்செல்ல பயணங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

வழக்குகளில் வெல்ல விளக்கு பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 முதல் 7 மணிக்குள் வீட்டில் பூஜையறையில் 31 தீபம் ஏற்றி கோளாறு பதிகமும் விநாயகர் அகவலும் படிக்க எப்படிப்பட்ட எந்த வித வழக்குகளாக இருந்தாலும் வெல்ல முடியும் வழக்கும் உங்களுக்கு சாதகமாக முடியும். மிகவும் நெருக்கடியான சூழ்நிலை பூதாகரமான பிரச்சனைகள் ஏற்பட்டால் நாள் கிழமை பார்க்க வேண்டியதில்லை உடனே 108 நெய் தீபம் பூஜையறையில் ஏற்றி கோளாறுபதிகம் மற்றும் கந்த சஷ்டி கவசம் படிக்க பாதிப்புகளின் வேகம் உடனடியாக குறையும் கைமேல் பலன் உடனடி பலன் கிடைக்கும்.

பணம் பெருக பரிகாரம்
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் போதவில்லையே என்ற பிரச்சினை இருக்கும். அதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது. வியாழக்கிழமை மாலை 4, 5 குபேரகாலம். இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் வரும். செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபட பணம் வரும். ஸ்ரீரங்கம் தாயாரை வழிபட பணம் வரும். கனகதாரா தோத்திரம் படிக்க பணம் வரும். அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைக்க பணம் வரும். விரைய செலவுகள் கட்டுப்படும் செல்வம் தங்கும்.

செல்வம் பெருக வழி
காலை எழுந்ததும் உள்ளங்கையை நன்றாக பார்க்க வேண்டும். தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும். நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

வெள்ளிக்கிழமை வழிபாடு
கிண்ணங்களில் அரிசி, உப்பு, மிளகாய், புளி, பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மஞ்சள், எண்ணெய், சர்க்கரை, நெய், காய்கறிகள் என அனைத்தையும் வரிசையாக வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த பொருட்கள் குறைவில்லாது நிறைவாக இருக்கும். வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும். தென்மேற்கில் அமைந்த அறையில் பணம், நகை புழங்கும் பீரோவை, கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். மேலும், பீரோவில் மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைத்தால், எந்த தோஷமும் வராது. பணம் பீரோவில் தங்கும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications