திருப்பதியில் "இவர்களுக்கெல்லாம்" அறை கிடையாது! திருமலை தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரம்மோற்சவ அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில் மற்றொரு அதிரடி உத்தரவையும் அறிவித்துள்ளது. அதாவது 9 நாட்களுக்கு குறிப்பிட்ட சிலருக்கு அறைகள் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள், கல்யாண சேவை, தோமலா சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் சாதாரண பக்தர்களும் பிரம்மோற்சவ காலத்தில் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான்!

இந்த நிலையில் பிரம்மோற்சவம் எப்போது என்பதை அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கு ஒரு மாதமே இருப்பதால் பிரம்மோற்சவத்திற்கு திருமலை திருப்பதி தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி கோகுலாஷ்டமி, ஆகஸ்ட் 28ஆம் தேதி உட்லோற்சவமும் நடைபெறவுள்ளது.
மேலும் புரட்டாசி மாதம் பிறக்க போகிறது, பிரம்மோற்சவம் ஆகியவை வரவுள்ளதால் திருப்பதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதாவது புரட்டாசி மாதம் 3, 4 ஆவது வாரத்தில்தான் இந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் போது காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி எழுந்தருளுவார். இந்த நிலையில் நவம்பர் மாதம் தரிசன டிக்கெட்டுகள் பல்வேறு பிரிவுகளில் இன்று முதல் தொடங்கிவிட்டது. ரூ 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது திருமலையில் தங்குவதற்கு நன்கொடையாளர்கள் யாருக்கும் அறை வழங்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவாரியின் பிரம்மோற்சவத்தில் சாமானியர்களும் கலந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கும் தங்கும் அறைகள் ஒதுக்க வேண்டும்.
எனவே இந்த 9 நாட்களும் நன்கொடையாளர்கள் யாருக்கும் திருமலையில் தங்குவதற்கு அறை வழங்க முடியாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பிரம்மோற்சவத்தின் போது நன்கொடையாளர்களுக்கான திட்டங்கள் செயல்படாது. வேண்டுமானால் அக்டோபர் 4, அக்டோபர் 12 ஆகிய இரு தினங்கள் மட்டும் சலுகைகளை பொருத்து நன்கொடையாளர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று (ஆகஸ்ட் 20) வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications