திருப்பதியில் லட்டு தயாரிக்க ஆட்கள் தேவை.. வைஷ்ணவ பிராமணர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதற்கான ஆட்கள் வேண்டி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லட்டு வரலாறு: திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒன்று திருப்பதி பாலாஜி, மற்றொன்று திருப்பதி லட்டு பிரசாதம். வேறெங்கும் இல்லாத அளவிற்கு அவ்வளவு தரமானதாகவும், சுவையானதாகவும் வேறெங்கும் கிடைப்பதில்லை. திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டுவிற்கு தனித்துவம் உண்டு. திருப்பதி லட்டு போல் வேறு எந்த இடத்திலும் தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை தனித்துவமாக இருக்கும். அதற்காகவே இந்த லட்டுக்கு மவுசு அதிகம்.

திருப்பதி லட்டு சுவை: எத்தனையோ பிரசாதங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விநியோகம் செய்யப்பட்டாலும் லட்டு பிரசாதத்திற்கு நிகர் வேறு எதுவுமில்லை. நாத்திகம் பேசுபவர்கள் கூட லட்டு பிரசாதத்தை ஆசையாக வாங்கி சாப்பிடுவார்கள். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள லட்டு என்பதால், திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் அதுபோல தயாரித்து விற்பனை செய்ய முடியாது. அதுமட்டுமல்லாமல் உற்பத்தி மற்றும் அளவு, நறுமணத்துடன் வேறு எங்கும் தயாரிக்கப்படுவதில்லை.
நெய் வாசம் வீசும்: ஏழுமலையானை தரிசனம் செய்தவர்கள் அடுத்து செல்வது லட்டு பிரசாதம் வாங்கத்தான். லட்டு தயார் செய்யும் பக்கம் சென்றாலே நெய் வாசம் கமகமக்கும். கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி,கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது. திருமலையில் தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
308வது பிறந்தநாள்: ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைப்பது, கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த லட்டு பிரசாதத்திற்கு தற்போது 308 வயதாகிறது. லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு மாதம் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2009ல் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. 'திருப்பதி லட்டு' என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தம்.
பிரசாத தயாரிப்பு பணி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், பிரசாதம் தயாரிக்கும் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆறு பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் வேலைகளை அறிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதிகள் என்னென்ன: அதில், பிரசாதம் தயாரிப்பதில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது தகுதியாக, விண்ணப்பதாரர்கள் ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியது. தற்போது இது சர்ச்சையாகியுள்ளது.
கோயில் சமையலறையில் பிரசாதம் தயாரிப்பது ஸ்ரீ வைஷ்ணவர்கள். பிரசாதம் தயாரிப்பது வைகானசா சாதியைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இல்லாதபோது, அல்லது கிடைக்காதபோது ஸ்ரீவைஷ்ணவர்களை அந்தப்பணியில் அமர்த்தலாம் என்கிறது ஆகம சாஸ்திரம். சாஸ்திரப்படி ஸ்ரீவைஷ்ணவர்கள் லட்டு செய்யலாம் என்று ஆகம சாஸ்திரம் சொல்வதாக கோவில் தலைமை அர்ச்சகர் கூறியுள்ளார்.
சாதி பாகுபாடு: திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவது நியாயமில்லை என்று இடதுசாரித் தலைவர்கள் வீடியோ வெளியிட்டதால் இப்பிரச்சனை பெரிதாகியுள்ளது. ராமானுஜாச்சாரியார் திருமலை கோயில் அமைப்பை சாதிக்கு அப்பால் வழிநடத்தினார். இப்போது, அது போல் அல்லாமல், திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிட்ட சாதியினருக்கு பிரசாதம் தயாரிக்கும் பணி வழங்க வேண்டும் என்று அறிவிப்பது நியாயமானது அல்ல என்றும் சிஐடியு தலைவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பு திரும்ப பெறப்படுமா?: ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்கள் பிரசாதம் தயாரித்தால், மற்ற பிராமணர்கள் அதனை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் தலித்துகள் தான் கனரக பிரசாதத் தட்டுகளை கோயில் வாசலில் இருந்து வாகனங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பிரசாதம் எடுத்துச் செல்வதற்கு மட்டும் தலித்துகளை பயன்படுத்தும்போது, லட்டு தயாரிப்பதற்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications