வாசல்ல உருளி வைக்கறீங்களா! எந்த மெட்டல்ல வைக்கலாம் தெரியுமா? "இந்த" உலோகம் வைத்தால் கஷ்டம் வரும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீட்டில் உருளியில் தண்ணீரில் குறிப்பிட்ட பூவை வைத்தால் அங்கு மகாலட்சுமியே இருப்பது போன்று அர்த்தம்!

முடி இருப்பவர்கள் அள்ளி முடிந்து கொள்கிறார்கள், பல் இருப்பவர்கள் பகோடா சாப்பிடுகிறார்கள்.. உனக்கேன் வயிற்றெரிச்சல் என காமெடியாக கேட்பதுண்டு. அது போல் பணம் இருப்போர் சேமிக்கிறார்கள் என எடுத்து கொள்ள முடியாது.

Uses of Uruli and how it removes negative vibes in Vaasapadi itself

உழைப்பு, நம்பிக்கை, நேர்மை இருந்தால் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். என்ன அந்த பணத்தை முறையாக எப்படி சம்பாதிப்பது என்பதுதான் சிலருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

பணக்காரர்களை விடுங்க! வருமானமே இல்லாதவர்கள், வருமானம் இருந்தும் 10 பைசா கூட தங்குவதில்லை என இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம். இதில் வருமானம் இருந்தும் பணம் தங்காமல் இருக்க சில காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முக்கியமானது கண் திருஷ்டி!

இதனால் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள். நிரந்தரமாக நம் வீட்டில் மகாலட்சுமியை வாசம் செய்ய வைக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வீடு, அலுவலகம், தொழிற்சாலை, கடை உள்ளிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். நம்பிக்கையோடு செய்தால் பலன் உண்டு!

லட்சுமி கடாட்சம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமான பொருள் உருளி. இதில் தினமும் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் பூக்களை மிதக்க விட வேண்டும். அந்த உருளியை வீட்டு வாசற்படி, வீட்டு வரவேற்பறை, பூஜை அறை உள்ளிட்டவற்றில் வைக்கலாம்.

அதிலும் உருளி எந்த உலோகத்தில் இருக்க வேண்டும் என்பது சிலருக்கு சந்தேகமாக இருக்கும். ஐம்பொன், பித்தளை, வெள்ளி, தங்கம் ஆகியவற்றில் எந்த உலோகத்தாலும் செய்யப்பட்ட உருளியை பயன்படுத்தலாம். இது மட்டுமல்லாமல் கண்ணாடி, பீங்கான், மண் உருளிகளையும் பயன்படுத்தலாம். இதெல்லாம் அவரவர் வசதியை பொருத்தது.

ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் எவர்சில்வர், இரும்பு, அலுமினியம் உருளிகளை பயன்படுத்தவே கூடாது. வீட்டு வாசலில் உருளியில் பூ போட்டு வைப்பதால் கண் திருஷ்டி விலகும். அந்த உருளியில் உள்ள தண்ணீர் கெட்ட ஆற்றலை உறிஞ்சிக் கொண்டு நல்லதை மட்டுமே வீட்டினுள் அனுப்பும்.

அந்த உருளியில் வாசனை மிகுந்த பூக்களை வைக்கலாம். இல்லாவிட்டால் வெட்டிவேர், ஜவ்வாது, ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்களையும் போடலாம். எல்லாவற்றையும் விட மருத்துவ குணங்கள் கொண்ட பூக்களை போடுவது நல்லது, அதே வேளையில் சிலர் பூக்கள் குறைவாக இருக்கிறது என்பதற்காக பூக்களை பிய்த்து இதழ் இதழாக போடுவார்கள். அது போல் செய்ய கூடாது, அது போல் காம்புகளையும் கிள்ளிவிடக் கூடாது.

உருளியில் இருக்கும் தண்ணீரை தினமும் மாற்றவேண்டும். ஒரு வேளை பூக்கள் வாடாமல் இருந்தால் அதை எடுத்துவிட்டு தண்ணீரை மாற்றி அதே பூக்களை கூட வைக்கலாம். தண்ணீர் தூசு துரும்புடன் இருக்கக் கூடாது. குறிப்பாக தாமரை மலரையும் வைக்கலாம். தாமரை மலர் வைத்தால் மகாலட்சுமியே வந்து குடியிருப்பாள்.

பின்னர் உங்களுக்கு கஷ்டம், நஷ்டம், பிரச்சினை, கெட்ட சக்தி உள்ளிட்டவை காணாமல் போகும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். முதலில் உருளியை வாங்கி மலர்களை போட்டு வாசலில் வைங்க. அப்புறம் உங்கள் வீட்டில் நடக்கும் அற்புதத்தை பாருங்கள்! எதுவாக இருந்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+