Vasant Panchami:சக்ரவர்த்தியாய் வாழலாம்.. வசந்தத்தை அள்ளித் தரும் வசந்த பஞ்சமி! ‘மஞ்சள்’ கலரை மட்டும் மறக்க வேண்டாம்
சென்னை: தை அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது தென் மாநிலங்களில் விஜயதசமி போல வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிறத்தாலான பொருட்களால் பூஜை செய்வதன் மூலம் மிகப்பெரிய பலன்களை அடைய முடியும். வசந்த பஞ்சமி அன்று மேற்கொள்ள வேண்டிய பூஜைகள், வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
வசந்த பஞ்சமி இன்று கடைபிடிக்கப்படுகிறது. மாதம் தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும் தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகிறது. இதில் கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி ஆகியவை பிரசித்தி பெற்றவை.

ஆடி அமாவாசைக்கு பிறகு கருட பஞ்சமியும், ஆவணி மாதத்தில் வரும் பஞ்சமி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் வசந்த பஞ்சமி வழிபாடு குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் விஜயதசமி அன்று புதிய தொழில் தொடங்குவது, கல்வியை தொடங்குவது போன்றவை நடப்பது போல், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு, காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வசந்த பஞ்சமி என்று தொழில் தொடங்குவதும், கல்வி கற்க தொடங்குவதும் நடக்கும்.
இந்த நாளில் கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியை பூஜிப்பதன் மூலம் ஞானம் பெற்று விளங்குவதோடு தங்கம் உள்ளிட்டவற்றை வீட்டில் குவிய வைக்கலாம். படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு உலகம் மிக அமைதியாக இருந்ததால் மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது அவரது கமண்டலத்தில் கீழே சிந்திய நீரில் இருந்து வெளிப்பட்ட பெண் சக்தி கையில் வீணையோடு இருந்தது. வெண் தாமரை மீது அமர்ந்திருந்த அந்த பெண் சக்தி தான் சரஸ்வதி தேவி.
அவரது வீணை இசையால் உலகில் இருந்த மரங்கள் அசைந்து, அலைகள் ஏற்பட்டு, உயிரினங்கள் சத்தமிட்டன. அதை எடுத்து அந்த உலகம் மிக அழகானதாக மாறியதாக கூறப்படுகிறது. தன் நாவிலேயே அந்த பெண் சக்தியை பிரம்மன் வைத்துக் கொண்டார். அதற்கு சரஸ்வதி என்றும் பெயரிடப்பட்டது. அவர் தோன்றிய தினம் தான் வசந்த பஞ்சமி ஆகும். இன்றைய தினத்தில் குழந்தைகள் முன்பாக பேனா, புத்தகம் உள்ளிட்ட கருவிகளை வைப்பார்கள். அதில் அந்த குழந்தை எதை தேர்ந்தெடுக்கிறதோ அதில் அந்த குழந்தைக்கு எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை.
அன்றைய தினத்தில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடை அணிவித்து வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாகும். இன்றைய நாள் மஞ்சள் நிறத்துக்கு தான் கூடுதல் முக்கியத்துவம். மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் பிள்ளையார், மஞ்சள் நிற லட்டு, மஞ்சள் நிற உணவுகள் ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு படைத்து வழிபட்டால் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். சூரியகாந்தி, சாமந்தி, கடுகு பூ ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு பூஜை பூக்களாக பயன்படுத்தலாம். இன்றைய தினத்தில் மஞ்சள் நிற ஆடை அணிவதும் கூடுதல் பலன்களை தரும்.
நேற்று காலை 9:14 தொடங்கிய பஞ்சமி திதி இன்று காலை 6.52 மணிக்கு நிறைவடைந்தது. ஆனாலும் அந்த பலன் முழுவதும் இன்று தொடரும் என்பதால், சரஸ்வதி தேவியை மஞ்சள் நிற பொருட்களைக் கொண்டு பூஜிக்கலாம். நேற்று தவறவிட்டவர்கள் இன்று பூஜை செய்வதும் பலன்களை அள்ளித் தரும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications