குதிரை சிலை தரும் ஆச்சரியம்.. நல்ல அதிர்ஷ்டம் தரும் சிலைகள்.. இதை மட்டும் வீட்டில் வெச்சிடுங்க.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெருக வேண்டுமானால், வாஸ்துப்படி சில பொருட்களை வைக்க வேண்டி வரும்.. அந்த வகையில், வீட்டில் சிலைகளை வைக்கலாமா? எந்த மாதிரியான சிலைகளை வைக்கலாம்? அதிர்ஷ்டம் தரக்கூடிய சிலைகள் என்னென்ன? வீட்டில் வைக்கக்கூடாத சிலைகள் என்னென்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருந்தால்தான், குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் தழைத்தோங்கும்.. வீட்டை வாஸ்துப்படி கட்டுவதுடன், வீட்டில் வைத்திருக்கும் பொருட்களையும் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ளபடி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

spirituality

விநாயகர் சிலைகள்: பாசிட்டிவ் ஆற்றல் பெருகவும், வீட்டில் அதிர்ஷ்டம் நிரம்பி காணப்படும், சில சிலைகளை கட்டாயம் வாங்கி வைக்க வேண்டும். அந்தவகையில், விநாயகர் சிலைகள் இதில் முதன்மையானவை.. எப்பேர்ப்பட்ட தடைகளாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த விநாயகர் சிலைகளுக்கு உள்ளது.. தடைகளை நீக்கும் விநாயகரின் சிலையை, வீட்டில் வைக்கும்போது பல்வேறு வெற்றிகள் குவியும்.

அடுத்ததாக, யானை சிலைகளை சொல்லலாம்.. ராகு தோஷம் தொடர்பான பிரச்சனைகளை போக்கக்கூடிய இந்த சிலைகள் ஐஸ்வர்யத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த சிலை உள்ள இடத்தில் லட்சுமி தேவி குடியிருப்பாள்.. எனவே, வெள்ளை அல்லது பித்தளையால் ஆன யானை சிலையை வீட்டில் வைத்திருந்தால், பண சிக்கல் தீர்ந்து மகிழ்ச்சியும் நிலைக்கும்.

ஆமை சிலைகள்: ஆமைகள் விஷ்ணுவுடன் தொடர்புடையது என்பதால், ஆமை சிலைகளை வீட்டில் வைக்கலாம்.. கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைப்பதே சிறப்பாகும்.. ஆனால், சில உலோகத்தால் செய்யப்பட்ட சிலையாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

தாய் பசு கன்று குட்டியுடன் இருக்கும் சிலையை வீட்டு வாசலை எதிர்நோக்கி வைக்கலாம். இதனால், வீட்டிற்குள் வரும் எதிர்மறையான ஆற்றலை தடுத்து நிறுத்தப்படுகிறது.. கிளிகள் எப்போதுமே மதுரை மீனாட்சி அம்மனின் அம்சமாக கருதப்படுகிறது.. இந்த கிளி சிலையை வீட்டில் வைத்தால் குழந்தைகளின் படிப்பு மற்றும் புத்தி கூர்மை அதிகரிக்குமாம்.

குதிரை சிலைகள்: மீன் தொட்டிகளை போலவே, மீன் சிலைகளையும் வைக்கலாம்.. பித்தளை அல்லது வெள்ளியால் ஆன மீன் சிலையை வைப்பதால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் தழைக்கும்.. வருமானமும் பெருகும்.. எனவே மீன் சிலையை வடகிழக்கு திசையை நோக்கி வைக்கலாம்... வாழ்வில் முன்னேற துடிப்போர், வீடுகளில் குதிரை சிலைகளை தெற்கே நோக்கி வைக்கலாம்.. அதாவது கதவு அல்லது ஜன்னலை பார்த்தவாறு இந்த சிலையை வைக்க வேண்டும்.

அதேபோல, பசு சிலைகள் வைக்கலாம்.. பசு அல்லது நந்தி சிலைகளை வீட்டில் வைப்பதாக இருந்தால், பித்தளை அல்லது வெள்ளைக் கல்லால் செய்யப்பட்டதாக இருக்கலாம். இதனால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும், அவர்களின் மனம் படிப்பில் ஈடுபடும்... ஒட்டகம் சிலைகளையும் சிலர் வைத்திருப்பார்கள்.. இந்த ஒட்டகமும் வாஸ்துவுடன் தொடர்புடையது. ஒட்டகம் முன்னேற்றத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. எனவே, ஒட்டக சிலையை வீட்டின் ஹாலில், வடமேற்கு திசையில் வைக்கலாம்.. இதனால், தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+