மறந்து கூட இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடாதீங்க..ஆயுள் குறையுமாம்..வாஸ்து சொல்லும் ரகசியம்
சென்னை: சாப்பிடும் போது எப்படி சாப்பிட வேண்டும். எப்படி சாப்பிடக்கூடாது என்று நமது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சில திசைகளை நோக்கி சாப்பிட வேண்டும் சில திசைகளை நோக்கி சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். எந்த திசை நோக்கி சாப்பிட்டால் ஆயுள் வளரும் எந்த திசை நோக்கி சாப்பிடக்கூடாது என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
நாம் சாப்பிடும் உணவு நமக்கு ஆரோக்கியத்தை தருவதாக இருக்க வேண்டும். பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்ட வாஸ்து சாஸ்திரத்தில் நான்கு திசைகளுக்கும் ஒரு சக்தி உள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளுக்கும் உள்ள ஆற்றலின்படி எந்த திசையை நோக்கி சாப்பிட்டால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, டைனிங் அறை வீட்டின் மேற்கு திசையில் இருக்க வேண்டும். இது மங்களகரமானது மற்றும் லாபகரமானது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் உணவு பற்றாக்குறையின்றி கிடைக்கும்.
வீட்டில் டைனிங் டேபிள் வைப்பதாக இருந்தால், பிரதான கதவு அல்லது கழிவறைக்கு முன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியின் டைனிங் டேபிளை பிரதான கதவுக்கு அருகில் வைக்க நேரிட்டால் அது வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, மன உளைச்சலுக்கு வழிவகுக்கும்.
சூரியன் உதயமாகும் கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள் வளரும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு திசை நோக்கி மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.
கிழக்கு திசையை நோக்கி சாப்பிட்டால் மூளை உற்சாகமடைவதோடு, உண்ணும் உணவு நன்கு செரிமானமாகி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த திசையை நோக்கி சாப்பிடுவது வயதானவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மிகவும் நல்லது. டென்சன், மன அழுத்தம் குறையும்.
மேற்கு திசையை நோக்கி சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மேற்கு திசையை நோக்கி சாப்பிட்டால், அது லாபத்திற்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போது மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் பகை உண்டாகும் என்ற ஒரு கருத்தும் உண்டு.
வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடும் போது சரியான முறையில் நமக்கு ஜீரணம் ஆகாது. இதனால் நமக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பல்வேறு குறைபாடுகள்வந்து சேரும். ஆகவே வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதே போல கைக்கழுவும் தொட்டி அல்லது பாத்திரம் கழுவும் தொட்டியானது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் கைக்கழுவும் தொட்டியானது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மறந்தும் தென்கிழக்கு திசையில் வைத்துவிட வேண்டாம். அது பண விரையத்தை ஏற்படுத்தி விடும்.
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். அதே போல அளவாகவே சாப்பிட வேண்டும். நிறைய கிடைக்கிறது என்பதற்காக அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது அது ஆயுளை குறைத்து விடும்.
சாப்பிடும் முன்பாக கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது என்றும் சொல்லி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications