என்ன செய்தாலும் தங்கம் சேர்க்க முடியவில்லையா? கவலை வேண்டாம்.. இதை பண்ணுங்க.. வாஸ்து டிப்ஸ்!
சென்னை: தங்கம் விற்கும் விலையில் நம்மால் ஒரு கிராம் ஆவது இன்றைக்கு வாங்க முடியுமா என்று பலரும் யோசிக்கின்றனர். ஒரு சிலர் மட்டும் சவரன் கணக்கில் தங்கம் வாங்குவார்கள். ஒரு சிலரோ தங்கம் என்பதை சொல்லக்கூட தயங்குவார்கள். தங்க நகைகள் வாங்கவும் அவை அடகு கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கவும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
தங்கம் மகாலட்சுமியின் அம்சம். மகாலட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே தங்க நகைகளை வாங்க முடியும். தங்கம் நம்முடைய வீட்டில் தங்குவதற்கு மகாலட்சுமியின் அருள் அவசியம் தேவை. நாம் அணியும் தங்கத்திற்கு உண்டான மதிப்பு மரியாதையை தர வேண்டும். கண்ட இடங்களில் நகைகளை கழற்றி வைக்கக்கூடாது. ஒரு சிலர் உறங்கும் போது நகைகளை தலையணைக்கு அடியில் கழற்றி வைப்பார்கள். ஒருபோதும் தங்க நகைகளை பாத்ரூமிலோ, சமையல் அறையிலோ கழற்சி வைக்கக் கூடாது.

நாம் அணியும் நகைகளை அதிகமாக அழுக்கு படிய விடக்கூடாது. அவ்வப்போது நல்ல தண்ணீரில் அலசி சுத்தம் செய்து அணிய வேண்டும். ஒரு சிலர் கம்மல், மூக்குத்தியை அழுக்கோடு அணிந்து கொண்டிருப்பார்கள். தங்க நகைகளை சுத்தமாகத்தான் அணிய வேண்டும். எண்ணெய் இறங்கி அழுக்காக இருந்தால் அதை சுத்தம் செய்து பளீச் என்று அணிய வேண்டும். வாரம் இரண்டு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். தங்கத்தை புதன், வெள்ளி கிழமைகளில் சுத்தம் செய்துதான் அணிய வேண்டும். மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து தங்கம் அதிகம் நம்முடைய வீட்டில் சேரும்.
நம்மிடம் இருக்கும் தங்கத்தை நாம் பாதுகாப்பாக பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்கம் சேரும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். தங்கம் நம்முடைய வீட்டில் சேருவதற்கு பெருமாளை சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும். இதன் மூலம் தங்கம் சேரும் செல்வம் அதிகரிக்கும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லும் போது துளசி மாலை வாங்கி கொடுக்க வேண்டும் அதன் மூலம் தங்கம் அடுத்தடுத்து சேரும்.
அதே போல நாம் பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலைகளை கண்ட இடத்தில் வைக்கக்கூடாது சில துளசி இலைகளை சாப்பிடலாம். சில துளசி இலைகளை நகைப்பெட்டியில் போட்டு வைக்கலாம். அதோடு சில கிராம்புகள், பச்சை கற்பூரம் போன்றவைகளையும் தங்க நகை வைக்கும் பெட்டியில் போட்டு வைக்கலாம். இதன் மூலம் உங்களுடைய வருமானம் பெருகி, நீங்களும் தங்க நகைகள் அடிக்கடி வாங்கும் அளவிற்கு செல்வம் அதிகரிக்கும். வாரம் ஒருமுறை துளசி இலைகளை மாற்றி விட வேண்டும். பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் வளர்க்கும் துளசி செடியில் இருந்து சில இலைகளை பறித்து நகை வைக்கும் பெட்டியில் போட்டு வைக்கலாம்.
பொதுவாகவே நாம் நகை வைக்கும் பீரோவை வடக்கு திசையில் வைக்க வேண்டும். வீட்டில் தங்கம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசையாகும். செல்வத்தை வடக்குத் திசையில் வைப்பது மேலும் மேலும் செல்வத்தை பெருக வைக்கும். தங்க நகை வைக்கும் பெட்டியில் சிறிய அளவில் பட்டுத்துணியை வைத்து வைப்பது நல்லது. நகை வைக்கும் பெட்டி இல்லாவிட்டாலும் பிங்க் கலர் பேப்பரில் சுற்றி பட்டுத்துணியில் வைப்பது தங்க நகைகளை வீட்டில் மேலும் மேலும் சேர்க்கும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications