வைகாசியில் வாஸ்து செய்தால் தை மாதம் கிரகப்பிரவேசம்..வாஸ்து நாளில் இதை செய்ய மறக்காதீங்க
சென்னை: வைகாசி மாதம் வாஸ்து நாளில் பூஜை செய்தால் தை மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாம் என்பது நம்பிக்கை. உறக்கத்தில் இருந்த வாஸ்துபகவான் நாளை விழிக்கும் நாள். ஞாயிற்றுக்கிழமை ஜூன் 4ஆம் தேதி வாஸ்து நாள் என்பதால் இந்த நாளில் வீடு கட்டிடம் கட்ட வாஸ்துபகவானை வணங்கி வீடு கட்டும் பணியை தொடங்க தடைகள் இன்றி வீடு கட்டி குடியேறலாம். நம்முடைய வீட்டில் வளர்ச்சியும் செல்வமும் அதிகரிக்க சில வாஸ்து டிப்ஸ்களையும் பார்க்கலாம்.
வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அதிபதியே ஸ்ரீ வாஸ்து புருஷர் ஆவார். இவர் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம் தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் ஆகும்.

கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும் பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.
சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
பூமி பூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். நாளைய தினம் 04.06.2023 ஞாயிற்றுக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 10.34 மணி வரை வீடு கட்ட வாஸ்து செய்யலாம். சொந்த வீட்டில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் வீட்டை சுத்தம் செய்து, நிலைப்படிகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடலாம். இதன் மூலம் சொந்த வீடு சுபிட்சமாக இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைவில் சொந்த வீடு கட்டுவார்கள்.
நாளைய தினம் காலை 10.00 மணியிலிருந்து 10.34 வரைக்கும் வாஸ்து நேரமாக சொல்லப்பட்டுள்ளது. காலையில் சீக்கிரமாகவே எழுந்து வீட்டினை சுத்தம் செய்து அருகம்புல் பறித்து மாலையாக கட்டி வைத்துக்கொள்ளுங்கள். பூஜை அறையில் விநாயகர், குல தெய்வத்தை வணங்கி அந்த மாலையை நிலைவாசலில் கட்டி தொங்க விடலாம். இதனால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும். சொந்த வீடு கட்டி வசிப்பவர்களுக்கு வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
அதே போல நம்முடைய வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்க வாஸ்து நாளில் சில வாஸ்து டிப்ஸ்களை பார்க்கலாம். ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது. வடமேற்கு எனப்படும் வாயுமூலை பகுதியில் குளியலறை அமையப் பெற்றால் வீட்டிற்கு வாஸ்து யோகத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் தடையற்ற பொருளாதாரம், திருப்திகரமான இல்லற வாழ்க்கை, நல்லவர்களின் நட்பு போன்ற பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன. பொதுவாக மேற்கு, வருண திசையாக இருப்பதால், மேற்கு மையமும், வடமேற்கும், குளியலறை அமைப்பதற்கு ஏற்ற இடம்.
கிழக்கு மையத்தில் அமைந்த குளியலறையும் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையைத் தரும். மருத்துவச் செலவுகளைக் குறைக்கும். எதையும் சமாளிக்கலாம் என்கிற மன உறுதியையும் அது வழங்கும். தெற்கு மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் நல்லதே. அந்தக் குடும்பத்தில் பெண்குழந்தைகள் கலை தொடர்பான துறையில் புகழ் பெறுவார்கள். காரணம் தெற்கு, பெண் ஆதிக்க திசை. இன்னும் சிலருக்கு தாங்கள் விரும்பிய குடும்ப வாழ்க்கை அமையவும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் பெண்களுக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் ஏற்படும்.
மேற்கு மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் மேலே சொன்னது போன்ற சிறப்பையே தரும். ஆனால் இது ஆண் ஆதிக்க திசை என்பதால் இது ஆண்களுக்குரிய பலன்களைத் தரும். அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு அல்லது திருப்திகரமான சொந்தத் தொழில், அந்தஸ்து போன்றவை அமையும். அந்த வீட்டின் நவீன பொருட்களின் சேர்க்கை இருக்கும்.
குளியலறை தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் குளியலறை-கழிவறை அமைந்தால், மருத்துவ செலவுகள், ஆபத்தான அறுவை சிகிச்சைகள், திடீர் விபத்துகள், பெரும் கடன் தொல்லை, பொருள் இழப்பு ஏற்படும். எனவே தவறான திசையில் குளியலறை கழிப்பறை கட்டியவர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். இதன்மூலம் எதிர்மறை ஆற்றல் பரவுவதை தடுக்கலாம். வீட்டில் குளியலறை, கழிவறையின் கதவுகள் எப்போதும் மூடியே இருக்க வேண்டும். குளியலறையின் கதவு திறந்திருந்தால், எதிர்மறை ஆற்றல் பரவுகிறது. இது உங்கள் வாழ்க்கையில் தடைகளை உருவாக்குகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications