கை தவறி கூட இந்த பொருட்களை கீழே போடாதீர்கள்..வறுமை வந்து விடுமாம்.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய சில விசயங்கள் நம்முடைய வீட்டில் கஷ்டத்தை கொண்டு வந்து விடும். சிலர் சின்னச் சின்ன சண்டைக்கு கூட கையில் கிடைக்கும் பொருட்களை வீசி எறிவார்கள். நாம் நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வீசி எறிந்தால் கஷ்டத்தையும் வறுமையையும் வரவேற்பது போலாகிவிடுமாம். எனவே கை தவறியும் கவனக்குறைவாகவும் கூட சில பொருட்களை நாம் கீழே போடக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சண்டை இல்லாத வீடு இருக்காது, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் சில வாய் சண்டையோடு நின்று விடுவார்கள். சிலரது வீடுகளில் சாப்பாட்டு தட்டு கூட பறக்கும். அப்படி சண்டையின் போது உணவு சாப்பிடும் தட்டினை தூக்கி வீசி எறிந்தால் அன்னதோஷம் ஏற்பட்டு விடுமாம். இதன் மூலம் அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாகி சில நேரங்களில் உணவு கிடைக்காமல் சிரமப்பட நேரிடுமாம். எனவே எந்த சூழ்நிலையிலும் நாம் நம்முடைய சாப்பாட்டு தட்டினை வீசி எறியக்கூடது.

நம்முடைய வீட்டில் சில நேரங்களில் சில பொருட்கள் கை தவறி கீழே விழுவது இயற்கைதான். அடிக்கடி பொருட்களை கீழே போடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாஸ்து தோஷம் இருக்கும் வீடுகளில்தான் பொருட்கள் அடிக்கடி கை தவறி கீழே விழும் என்று சொல்வார்கள்.
உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. கல் உப்போ, தூள் உப்போ நாம் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உப்பை ஒருபோதும் நாம் கீழே சிந்தக்கூடாது. கீழே அடிக்கடி உப்பை கொட்டுவதால் வீட்டில் சிக்கல் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக இருக்கும். பணம் தொடர்பான சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் உப்பினை யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது.
சமையல் அறையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவைகளை சிலர் அடிக்கடி தவற விடுவார்கள். அப்படி தவறவிடுவது அன்னை மகாலட்சுமியை வருத்தப்பட வைத்து விடும். செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியின் கோபத்திற்கு ஒருபோதும் ஆளாகக் கூடாது. தானியங்கள் கீழே விழுந்தாலும் அதை எடுத்து கழுவி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
நல்லெண்ணெய், எள், கடுகு, மிளகு போன்றவைகளை நாம் சிந்தக்கூடாது. சனி பகவானுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே அஞ்சறைப்பெட்டியில் இருந்து பொருட்களை எடுக்கும் போதும் எண்ணெய் பாட்டிலை எடுக்கும் போதும் கவனமாக எடுக்க வேண்டும்.

சமையல் பாத்திரங்கள், கரண்டி, கிண்ணம், டம்ளர் போன்றவைகளை சிலர் கை தவறி கீழே விடுவார்கள். சிலர் வேண்டும் என்றே தூக்கி வீசி எறிவார்கள். எனவே ஒருபோதும் நம்முடைய வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்கள் தூக்கி வீசி எறியக்கூடாது. அப்படி எறிந்தாலோ கை தவறி கீழே விழுந்தாலே மகலாட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம்.
பூஜை அறையில் கூட சிலர் பொருட்களை தவறவிடுவார்கள். பூஜை தட்டு, ஆரத்தி தட்டினை அடிக்கடி சிலர் தவற விடுவார்கள். சிலர் குத்துவிளக்கினை கூட தவற விடுவார்கள். அப்படி தவற விடக்கூடாது ஒருவேளை தவறி தெரியாமல் கீழே விழுந்தாலோ, ஏற்றிய குத்துவிளக்கு அணைந்தாலோ குல தெய்வத்திற்கு நாம் காணிக்கை முடிந்து வைத்து விட்டு பூஜையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications