வீட்டில் மறந்து கூட இந்த பொருட்களை வைக்காதீர்கள்.. அதிர்ஷ்டம் எட்டி கூட பார்க்காது.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீடு என்பது குடும்பத்தோடு சேர்ந்திருக்கும் இடம். மகிழ்ச்சியோடு வாழ வேண்டிய இடத்தில் சண்டை சச்சரவுகள் அதிகம் இருந்தால் அங்கே ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். அந்த குறையை சரி செய்தால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நம்முடைய வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கியது வாஸ்து. மக்கள் நிம்மதியாகவும், செழிப்பாகவும் வாழ அவர்கள் வசிக்கும் வீடு, தொழிற்சாலை, தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏனைய கட்டடங்கள் வாஸ்து சாஸ்திர விதிகளை அனுசரித்துக் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம்
வீடு வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால் அங்கு மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் குறைவிருக்காது. வீடோ, வியாபார ஸ்தலமோ, தொழிற்சாலையோ, சொந்தமோ, வாடகையோ வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு வீட்டிலோ, மனையிலோ, கடையிலோ அலுவலகத்திலோ நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும். சில தேவையற்ற பொருட்கள் இருந்தால் அது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். நோய் பாதிப்பையும், அதிர்ஷ்டமின்மையையும் உருவாக்கிவிடும். ஒரு வீட்டிலோ, அலுவலகத்திலோ சண்டை சச்சரவுகள் அதிகம் இருந்தால் அந்த இடத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். என்னென்ன பொருட்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், மகிழ்ச்சி தங்கும் என பார்க்கலாம்.
வீடோ, அலுவலகமோ செங்கல், சிமெண்டினால் கட்டப்பட்டிருந்தாலும் அது சரியான முறையில் கட்டப்பட்டிருந்தால் மட்டுமே நேர்மறை சக்திகள் அங்கே அதிகம் இருக்கும். நம்முடைய அலுவலகமோ, வீடோ எது என்றாலும் அங்கே மகிழ்ச்சியும், நேர்மறை சக்திகளும் நிறைந்திருக்க வேண்டும். அப்போதுதான் செல்வம் தங்கும். நல்லவை அதிகம் நடக்கும்.
மகாலட்சுமி வரக்கூடிய பகுதி நுழைவு வாசல்தான். வீட்டின் நுழைவாயில் கதவானது வீட்டினுள் இருக்கும் மற்ற கதவுகளை விட மிகப்பெரியதாக இருக்க வேண்டும் மற்றும் இந்த நுழைவாயில் கதவானது கடிகார சுற்று முறையில் திறக்கும்படி அமைந்து இருக்க வேண்டும். நுழைவாயில் சுத்தமாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நல்ல எண்ணங்கள் வீட்டிற்குள் வரும். குப்பை தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது முக்காலிகள் போன்றவற்றினை வீட்டின் முன்கதவிற்கு அருகில் கண்டிப்பாக வைக்கக்கூடாது.
வீட்டின் நுழைவாயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேவையான அளவிற்கு வெளிச்சம் இருக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் வாசலுக்கு எதிர்திசையில் கண்ணாடியினை வைக்கக்கூடாது அப்படியிருந்தால் அது நுழைவாயில் கதவின் பிம்பத்தினை அப்படியே பிரதிபலிக்கும், இதனால் வீட்டினுள் வரும் நல்ல ஆற்றலை அப்படியே திருப்பி அனுப்பி விடும். அன்னாச்சிப் பழம் ஒவியத்தை உங்களது வீட்டில் அல்லது தொழில் நடக்கும் இடத்தில் முன்புற அறைகளில் வரைந்து வைத்தால் அதிஷ்டமும், வாய்ப்புகளும், நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.
வீட்டின் பூஜை அறையில் மாலை நேரத்தில் எப்போதுமே இருட்டாக வைத்திருக்கக் கூடாது வெளிச்சமான லைட் போட வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்திருக்க வேண்டும். விளக்கேற்றிய பின்னர் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாடல்கள், சிவன் பாடல்களை ஒலிக்க விடுவது நல்லது.
வீட்டிற்குள்ளேயோ அலுவலகத்திலேயோ உடைந்த பொருட்களையோ, உடைந்த கண்ணாடிகளையோ, சாமி படங்களையோ வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அது பொருளாதார ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் பணம் செலவாகும். பழுதடைந்த பழைய பொருட்கள், உடைந்த பொருட்கள், ஒடத்தின் படம் ஆகியவற்றை கண்டிப்பாக வீட்டினுள் எந்த பகுதியிலும் வைக்க கூடாது. குறிப்பாக படுக்கை அறையில் ஆந்தை சிலை, ஆந்தை படம், ஓடம், நீர்வீழ்ச்சி போன்ற படங்கள், மீன் தொட்டி, போன்றவற்றை வைக்க கூடாது.
காதலின் பெருமையை உணர்த்துவதற்காக தன் மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய கல்லறைதான் தாஜ்மகால். இது மரணத்தையும் சோகத்தையும் நினைவு படுத்தக்கூடியது. எனவே இதுபோன்ற படங்களையோ, சிலைகளையோ வீட்டில் வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருந்தால் இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து போகும்.
நடராஜரின் நடனம் உலக இயக்கத்திற்காகத்தான் என்று கூறுவார்கள். அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ, படமோ இருக்கும். ஆனால் நடராஜரின் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஒரு காலை தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் உருவத்தை வீட்டிற்கு வைப்பது நல்லதல்ல என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
சிலர் அழகிற்காக வீட்டிற்குள் நீர்வீழ்ச்சி போல் வைத்திருப்பார்கள். ஒரு சில வீடுகளில் அதுபோன்ற இயற்கை காட்சிகள் நிரம்பிய படங்களை சுவர்களில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது வீட்டில் உள்ள செல்வம், வருமானத்தை வெளியேற்றி விடும் என்பதால் இதுபோன்ற படங்களை அழகிற்காக வைத்திருக்க வேண்டாம் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

வீட்டிற்குள் வைத்து வளர்க்க வேண்டிய செடிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். முள் செடிகள், எதிர்மறை சக்திகளை அதிகரிக்கக்கூடிய செடிகளை வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தால் பணத்தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விடும். அதேபோல செயற்கை செடிகளையோ காகிதப்பூக்களையோ வீட்டிற்குள் வைத்திருக்கக் கூடாது. இது வீட்டிற்குள் எதிர்மறை எண்ணங்களை நாமே வரவேற்பது போலாகிவிடும். இதே போல பழுதடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால் அதை உடனே கடையில் மாற்றி விடுவது நல்லது. அல்லது எடைக்கு போட்டு விட வேண்டும். அப்படி வீட்டிலேயே போட்டிருந்தால் அது எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சண்டை சச்சரவுகளை அதிகரிக்கும்.
குழந்தைகளின் படுக்கை அறைக்குள் சிங்கம், புலி, போன்ற காட்டு விலங்குகளின் படங்களை ஒரு சிலர் வீடுகளில் மாட்டி வைத்திருப்பது இது நல்லதல்ல. அந்த மிருகங்களின் குணங்கள் வீட்டில் உள்ள நம் குழந்தைகளுக்கு தொற்றிக்கொள்ளும் என்கின்றனர். இயற்கை காட்சிகளையும், மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் படங்களையும் மாட்டி வைப்பது நல்லது. மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள். இதே போல ராமாயண போர்க்கள காட்சியும் பாதிப்பை ஏற்படுத்தும். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் ராமர் பட்டாபிஷேக படங்களை வைத்திருப்பது குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும். நம்முடைய அலுவலகமோ, வீடோ எது என்றாலும் அங்கே மகிழ்ச்சியும், நேர்மறை சக்திகளும் நிறைந்திருக்க வேண்டும். அப்போதுதான் செல்வம் தங்கும். நல்லவை அதிகம் நடக்கும். வீடு வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால் அங்கு மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் குறைவிருக்காது. செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றுவது அவசியம்.
-
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications