Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாஸ்து டிப்ஸ்.. வீட்டில் இந்த தவறு செய்யாதீர்கள்.. வருமானம் பாதிக்கும்.. நோய்களால் செலவு வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலருக்கு எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கும். திடீர் நோய்களால் மருத்துவ செலவு வரும். வீட்டில் ஏதாவது ஒரு பொருள் அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். வீட்டில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் பண வருமானத்தில் தடையை ஏற்படுத்தும் செலவுகளை அதிகரிக்கும்.

கோடியாக சம்பாதித்தாலும் சிலருக்கு விரைய செலவுகள் தேடி வரும். காரியத்தடைகள தடைப்பட்ட காரியங்கள், பெயர், புகழ் என அனைத்து செல்வங்களும் பெருக வீட்டில் சில செயல்களை செய்யக்கூடாது. வீட்டை குப்பையாக வைத்திருக்க கூடாது. ஒட்டடைகள் இருக்கக் கூடாது, தலையை சீவிய முடிகளை அப்படியே சீப்பில் வைக்கக் கூடாது.

எச்சில் பாத்திரங்களை வீட்டில் போட்டு வைத்திருக்கக் கூடாது. சமைத்து முடித்து விட்டு இரவு உறங்கப்போகும் முன்பாக நாம் அழுக்கான பாத்திரங்களை அப்படியே சிங்க்கில் போட்டு வைக்கக்கூடாது. நன்றாக சுத்தம் செய்து விட்டு சமையல் அறை மேடையையும் சுத்தமாக செய்து வைத்து உறங்கப்போனால் வீட்டின் நேர்மறை ஆற்றல் சக்தி அதிகரிக்கும்.

சுத்தமில்லாத வீட்டிற்குள் மகாலட்சுமி வரமாட்டாள். விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வரக்கூடாது. கரையாண்கள் சேரக்கூடாது. சூரியன் மறைந்த பின்னர் விளக்குகள் போட்ட பின்னர் வீட்டை பெருக்கி வெளியில் தள்ளக்கூடாது. ஈர துணிகளை ஊறவைத்திருக்க கூடாது. வீடு வெளிச்சமாக இருக்க வேண்டும்.

தண்ணீர் குழாய்களில் கசிவு இருக்கக்கூடாது. தண்ணீர் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ஒழுகிக் கொண்டிருந்தால் அது நிதி இழப்பை ஏற்படுத்தும். எப்போது பார்த்தாலும் வீட்டிற்குள் அழுகையும் ஒப்பாரியும் கேட்க கூடாது. சாமி பாடல்கள் மெல்லிசை பாடல்கள் மட்டுமே கேட்க வேண்டும் குத்துப்பாட்டுக்களை போட்டு அலற விடக்கூடாது.

பெண்கள் அதிகம் உபயோகப்படுத்தும் இடம் சமையல் அறை. ஆற்றல் சக்தி அதிகம் பயன்படும் இடமும் சமையல் அறைதான். சமையல் அமைப்பதற்கு சரியான திசை சமையல் அறைதான். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமே சமையல் அறையில்தான் இருக்கிறது. சமையல் அறை சரியாக இருந்தால் பண வருமானம் நன்றாக இருக்கும். அந்த வீடு செல்வ செழிப்பு நிறைந்ததாக இருக்கும்.

நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால்தான் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிக வருமானம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எனவேதான் தென்கிழக்கு பகுதியை சமையல் அறையாக பயன்படுத்தினால் அக்னி மூலை வலிமையடையும். பெண்களின் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

வீட்டில் சமையலறையில் உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைக்க கூடாது. இல்லை என்ற எதிர்மறை பேச்சுக்களை பேசக்கூடாது. படுக்கை அறை, பூஜை அறைகளை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். செருப்பு, துடைப்பம் போன்றவற்றை அலங்கோலமாக போட்டு வைத்திருந்தால் அது தடைகளை ஏற்படுத்தும்.

தினமும் உங்களது வீட்டில் சுத்தமான பூக்களை வைக்கவேண்டும். வாடிய பூக்களையோ செயற்கையான பூக்களையோ வைக்கக் கூடாது. வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும் எளிய வழி என்கிறது சாஸ்திரம். வீட்டில் நுழையும் எதிர்மறை எண்ணங்களை இவை நீக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக் காற்றை தூய்மையாக்கும்.

பெயர், புகழ் என அனைத்து செல்வங்களும் வீட்டிற்குள் பெருக சுப காரியங்கள் அதிகம் நடைபெற நாம் சில பொருட்களை வைத்தால் நமது பணக்கஷ்டம் தீரும். வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள் நாட்டிய கணபதி சிலை ஒன்றை வாங்கி வைக்க வேண்டும். அத்தனை பணக்கஷ்டமும் காணாமல் போய்விடும். குறிப்பாக, வீட்டின் தலை வாசலுக்கு நேராக இந்த சிலையை வைப்பது வீட்டுக்குச் சுபிட்ஷத்தை அள்ளித் தரும்.

Vastu tips Tamil: How to improve your Health and increase your Wealth

புல்லாங்குழல் வைத்திருக்கும் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள். ஸ்ரீ யந்திரம் அல்லது லட்சுமி யந்திரத்தை வாங்கி வீட்டிற்குள் வையுங்கள். வாஸ்து தோஷங்கள் நீங்கும். லட்சுமி தேவியின் அருள் பெற்ற சங்கு வாங்கி வைப்பது நல்லது. அன்னை லட்சுமி தனது கையில் சங்கினை வாங்கி வைத்திருப்பது போன்ற படங்களை வாங்கி மாட்டி வைக்கலாம்.

ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி அருள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகும். கண் திருஷ்டிகள் விலகும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

குபேரன் சிலை வாங்கி வீட்டில் வைக்கலாம். குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. வீட்டில் வானவில் படங்களை வாங்கி வைக்கலாம். இது உங்களுக்கு அதிஷ்டத்தையும் மனதில் மகிழ்ச்சியையும் தரும். நேர்மறை ஆற்றலையும் வீட்டிற்குள் அதிகரிக்கச் செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+