நோய்களை நீக்கி ஆரோக்கிய வாழ்வு தரும் யானை முகன்.. எந்த விநாயகரை எப்படி வழிபட வேண்டும்
சென்னை: கருங்கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கோவில்களில் வைத்து வழிபடப்படும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரையும், ஸ்படிக விநாயகர், மரக்கட்டைகளால் செய்யப்பட்ட விநாயகரையும் வீட்டில் வைத்து வழிபடுவார்கள். எந்த விநாயகரை எப்படி வழிபட்டால் எந்த நோய் நீங்கும் என்று பார்க்கலாம்.
விநாயகர் எளிமையானவர். மஞ்சள், பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தால் கோடி புண்ணியம் என்பவர். நாம் மனதார வழிபட்டாலே அனைத்து வித நலன்களை அள்ளித்தருவார். மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அருள்வார். கருங்கல்லினால் ஆன விநாயகரை எந்த காரியமும் வெற்றியில் முடிய அருள்வார்.

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று விநாயகரை விரதம் இருந்து வணங்கலாம்.
'ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்' என்று விநாயகருக்கான காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட்டால் நல்லதே நடக்கும்.
விபூதியால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் நீங்கும். குங்குமத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீரும். சந்தனத்தால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் நல்ல பிள்ளைபேறு கிட்டும்.
உப்பினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். வெல்லத்தினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் உடலில் உள்ள கொப்பளங்கள் மறையும். சர்க்கரையால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வீட்டில் இனிமையான சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.
மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களையும் அருள்வார். பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடக்கும். வெள்ளெருக்கில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் பில்லி சூனியம் அகலும். வாழைப்பழத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் விநாயகரை வழிபடலாம்.
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும். குங்குமத்தில் பிடித்து வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகுவதாக ஐதீகம். பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம் செழிப்பதுடன், உடல் நோய்கள் அகலுவதாகவும் நம்பிக்கை.
மனிதர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. விதவிதமான நோய்களும் தாக்குகின்றன. நோய்களுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கிறார் விநாயகர். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். ஆலயங்களில் உள்ள கோஷ்ட விநாயகரை வணங்க, அனைத்து தெய்வங்களின் திருவருளும் கிடைக்கும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும். நடன கணபதி, கலைகளில் சிறந்து விளங்கச் செய்வார்.
விபூதியால் பிடித்து வைத்து வழிபட்டால் நோய்கள் தீர்வதாக ஐதீகம். வெள்ளெருக்கு விநாயகரை வழிபாடு பில்லி, சூனிய பாதிப்புகளை தடுக்கிறது. சந்தன பிள்ளையார் வழிபாடு காரணமாக புத்திர பாக்கியம் ஏற்படுவதாக நம்பிக்கை. வெல்லம் மூலம் அமைக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால், உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் உருவாகும் கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் மறைந்து விடுவதாக ஐதீகம். சர்க்கரை பிள்ளையார் செய்து வழிபட்டால் நீரிழிவு நோய் தீரும் வாய்ப்புகள் ஏற்படும்.
வாழைப்பழத்தில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால் வம்ச விருத்தி ஏற்படுவதாக நம்பிக்கை. வெண்ணெய் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வியாபார கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைகளும் விலகுவதாக ஐதீகம். உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை விலகி விடும் என்பது நம்பிக்கை.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications