Vinayagar Chathurthi 2025: நாளை விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார் சிலை வாங்க நல்ல நேரம் எது?
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் மண் பிள்ளையார் வாங்க நல்ல நேரம் எது, கொழுக்கட்டை, சுண்டல் படையல் போடுவது எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி என்பவர் கூறியிருப்பதாவது: விநாயகர் சதுர்த்தி எப்போது, அதை எவ்வாறு வழிபடுவது, அதை வழிபடும் முறை என்ன, சிலை வாங்கும் நேரம் மற்றும் கொழுக்கட்டை படையல் செய்வதற்கான நேரத்தை பார்க்கலாம்.

விநாயகர் எளிமையான கடவுள். 10 ரூபாய்க்கு அவல் பொரி, கடலை வாங்கி வைத்து, அருகம்புல் மாலை போட்டு பிள்ளையாரப்பா எனக்கு அனுகிரகம் செய் என பிரார்த்தனை செய் என வழிபட்டாலும் ஏழைகளுக்கும் அருள் புரிவார். அவரை வழிபட ரோஜா பூ, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்கள் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அருகை எடுத்து அவன் அருகே சென்று அர்ச்சித்தால் பகுதி, விகுதி என்கிற பல்வேறு நலன்களை அருள கூடியவர்களாக விளங்குகிறார் என விநாயகர் குறித்து அருளாளர்கள் எல்லாம் கூறியுள்ளனர். விநாயகரை வழிபட்டால் உடனடியான நலன்கள் நமக்கு கிடைக்கும்.
சிதறு தேங்காய்
ஏதோ ஒரு காரியம் தடைபட்டு கொண்டே இருக்கும் போது அந்த காரியம் நமக்கு உடனே நடக்க வேண்டும் என்றால் நான் சொல்வது, பக்கத்தில் இருக்கும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு ஒரு காரியத்தை தொடங்குங்கள். நிச்சயம் அந்த காரியம் வெற்றியாகும்.
சிதறு காயை உடைத்துவிட்டு என் வினைகள் எல்லாம் சிதறிவிட வேண்டும். பிரச்சினைகள் எல்லாம் நீங்க வேண்டும். நல்ல வழியை காட்டு என கேட்டால் அதன் பிறகு எல்லாமே ஏறுமுகமாகவே நடக்கும். அப்படிப்பட்ட விநாயகரை நாம் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடுவதுதான் விநாயகர் சதுர்த்தி விழா!
ஔவையார் விநாயகர் வழிபாட்டை செய்தவர். தினமும் விநாயகருக்கு பூஜை செய்த ஔவையார், ஒரு நாள் கொஞ்சம் வேகமாக வழிபாடு செய்துவிட்டார். உடனே விநாயகர் பெருமான், "பாட்டி என்ன அவசரம், ஏன் இவ்வளவு வேகமாக கும்பிடுகிறாய், எங்கே போக போகிறாய்!" என கேட்டதும் ஔவாயாருக்கு கை, கால் எல்லாம் நடுங்கியது.
அவசரமாக வழிபட்ட பாட்டி
அப்போது ஔவையார், "பிள்ளையாரப்பா என்னை மன்னித்துவிடு, சேரமான்நாயனாரை கூட்டிக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் போகிறாராம். நான் போனால் யார் என்னை உள்ளே விடுவாங்க, கைலாய தரிசனம் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் இல்லையா, அதனாலதான் இன்னிக்கு கொஞ்சம் வேகமாக கும்பிட்டேன் தவறுதான் என்னை மன்னித்துக்கோ" என்றாராம்.
அதற்கு பிள்ளையார், "பாட்டி பொறுமையா கும்பிடு, உனக்கென்ன கைலாயத்தைதானே பார்க்க வேண்டும், நான் இருக்கேன் கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டு வழிபாட்டுக்கு விநாயகர் அமர்ந்துவிட்டார்.
ஔவையார் கைலாய கதை
ஔவையார் பிள்ளையாரை பொறுமையாக கும்பிடுகிறார். விநாயகர் அகவல் பாடி வழிபாடு செய்தார். அப்போது பிள்ளையார், "பாட்டி, என்னை நம்பி, விநாயகர் அகவல் பாடி பொறுமையாக கும்பிட்டாய், நம்பிக்கை வைத்தாயே" என கூறி, பாட்டியை தும்பிக்கையால் தூக்கி கொண்டு போய் எல்லாருக்கும் முன்பு கைலாயத்தை தரிசிக்க வைத்தார்.
வளர்பிறை சதுர்த்தி
விநாயகருக்கு மாதந்தோறும் சதுர்த்தி வருகிறது. வளர்பிறை. தேய் பிறை சதுர்த்திகளில் சிறப்பான வழிபாடு நடைபெறும். சங்கடஹர சதுர்த்தியையும் கொண்டாடுகிறோம். எனினும் எல்லாருக்கும் தெரிந்து கோலாகலமாக கொண்டாடக் கூடிய சதுர்த்தி மகா சதுர்த்தி இந்த விநாயகர் சதுர்த்திதான்.
பிள்ளையார் சதுர்த்தி எப்போது
இந்த விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது என சிலருக்கு யோசனை இருக்கிறது. இந்த ஆண்டு 26ஆம் தேதி பிற்பகல் 2.22 மணி முதல் அடுத்த நாள் 27ஆம் தேதி வரை மாலை 3.52 மணி வரை சதுர்த்தி திதியாகும். காலையில் சதுர்த்தி இருக்க வேண்டும் என்பதால் 27ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி.
பிள்ளையார் வாங்கும் நேரம்
பிள்ளையார் வாங்கும் நேரம் 26ஆம் தேதி மாலை 4.50 மணி முதல் 5.50 மணி வரை, அப்படி இல்லாவிட்டால் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை. 27ஆம் தேதி வழிபடும் நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணி வரை ஆகும்.
பிள்ளையார் பூஜை
27ஆம் தேதி பிள்ளையார் வாங்குவது என்றால் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வாங்கலாம். பூஜையும் செய்யலாம். கொழுக்கட்டை, சுண்டல், எள்ளு உருண்டை உள்ளிட்டவைகளை படைப்பது என்றால் மதியம் 1.35 மணி முதல் 2 மணி வரை படைக்கலாம். மாலையில்தான் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது என்றால் மாலை 6.10 மணிக்கு மேல் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications