திருப்பதியில் "இந்த" 2 நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து! தேவஸ்தான் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரு நாட்குக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்த இரு நாட்களில் 5 மணி நேரத்திற்கு எந்த பக்தர்களுக்கும் ஏழுமலையானை பார்க்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துவிட்டது.
திருமலை திருப்பதிக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை, விடுமுறை, பிரம்மோற்சவ நாட்களில் இந்த எணணிக்கை லட்சத்தை தாண்டுகிறது.

திருமலைக்கு பக்தர்கள் சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், ரூ 300 சிறப்பு கட்டண தரிசனம் போன்றவைகளின் மூலம் வருகை தருகிறார்கள். இவர்களில் தேவைப்படுவோர் தங்குமிடங்களை புக் செய்து கொள்கிறார்கள்.
இல்லாதவர்கள் கோயிலிலேயே ஆங்காங்கே தங்கிவிடுகிறார்கள். இந்த நிலையில் ரூ 300 கட்டண தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அது போல் பல்வேறு சேவைகளிலும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இதை தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கையை திருப்பதி தேவஸ்தான் மேற்கொண்டுள்ளது. அதாவது திருப்பதி திருமலையில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்யவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் 16ஆம் தேதி நடக்கிறது.
இதைத் தொடர்ந்து 9ஆம் தேதி கோயிலில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. 9ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. எனவே ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும் 9ஆம் தேதியும், 16 ஆம் தேதியும் இரு நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications