கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை வேண்டுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க..நல்ல செய்தி வீடு தேடி வரும்
மனதிற்கு பிடித்த வேலை அமைய வேண்டும் என்று வேண்டுபவர்கள் புதன் கிழமைகளில் புத பகவானுக்கு கற்கண்டை வைத்து வழிபட்டு, அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தானம் கொடுக்க வேண்டும்.
சென்னை: எந்த ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் முன்பாக இனிப்போடு ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வார்கள். வீடு கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுபகாரியங்களின் போது டயமண்ட் கல்கண்டு வைத்து வரவேற்பார்கள். டயமண்ட் கல்கண்டு வைத்து பரிகாரம் செய்தால் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக்கு வீடு வாசப்படி...என்னதான் ஒற்றுமையான கணவன் மனைவியாக இருந்தாலும் சண்டை வராத வீடு இல்லை. வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை வந்து கொண்டே இருந்தால் குடும்பத்தில் நிம்மதி பறி போய்விடும். சண்டை சச்சரவு தீரவும் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவும், டயமண்ட் கற்கண்டை வைத்து பரிகாரம் செய்யலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் தம்பதியராக சென்று நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு இரண்டு அகல் விளக்குகள் புதிதாக வைத்து அதில் நெய் ஊற்றி கற்கண்டு போட்டு தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும். எப்பொழுதும் தங்களுக்குள் சண்டை வரக்கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்தடுத்த நாட்களில் உங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் இனிப்பாக மாற துவங்கும்.
மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமையில் டைமன் கற்கண்டு போட்டு விளக்கு ஏற்றி வழிபடுவதோடு மட்டுமல்லாமல், அந்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், அன்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும், பண வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும்.

மனதிற்கு பிடித்த வேலை அமைய வேண்டும் என்று வேண்டுபவர்கள் புதன் கிழமைகளில் புத பகவானுக்கு கற்கண்டை வைத்து வழிபட்டு, அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தானம் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் கற்பூரத்தை ஏற்றி வைக்கும் பொழுது சிறிதளவு கற்கண்டை பொடித்து எரித்து விடுங்கள். இதனால் உங்களை பீடித்துக் கொண்டிருந்த தோஷங்கள் விலகும். நல்ல வேலை விரைவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
செய்த பாவங்களை நீக்கக்கூடிய சக்தி சனி பகவானுக்கு உண்டு. சனி பகவானுடைய பிடியிலிருந்து விடுபட்டு மேலும் அவருடைய கெடுபலன்களை குறைத்து சுபீட்சத்தை உண்டாக்கக்கூடிய அருமருந்தாகவும் கற்கண்டு பொடி செயல்படுகிறது. கற்கண்டை பொடித்து அரிசி மாவுடன் சேர்த்து கட்டெறும்பு வரக்கூடிய இடங்களில் தூவி தானம் செய்யும் பொழுது நம்முடைய சாதகமற்ற சூழ்நிலை மாறி, அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும்.
சுக்கிர பகவான் சுக போக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர். ஆடம்பரத்தையும், சுகங்களையும் வாரி வழங்கக்கூடிய இவர் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய உதவுகிறார்.
சுக்கிர பகவானுடைய அம்சமாக இருக்கக்கூடிய இந்த கற்கண்டை பெருஞ்சீரகத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமான சக்தி அதிகரிக்கிறது மேலும் இது ராகு பகவானுடைய பாதகமான கெடு பலன்களை குறைக்கக்கூடிய ஆற்றலும் பெற்றுள்ளது. நினைவாற்றலையும், நேர்மறை சிந்தனைகளையும் கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரமாக இது திகழ்கிறது. எனவே தினமும் சாப்பிட்ட உடன் பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கற்கண்டை சாப்பிடலாம்

சுக்கிரபகவான் பண பிரச்சனையை தீர்த்து மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்கிறார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிரிவினையை அகற்றி அவர்களுக்குள் இன்பமான ஒரு வாழ்க்கை அமையவும் சுக்கிர பகவானின் அருள் தேவை எனவே இந்த சுக்கிரனுக்கு உரிய கற்கண்டை தினமும் பூஜை அறையில் நைவேத்தியமாக படைத்து, விளக்கில் கற்கண்டுகளை போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர கணவன் மனைவி இடையே காதல் உணர்வு அதிகரிக்கும்.
மகாலட்சுமிக்கு உகந்த டயமண்ட் கற்கண்டை நான்கிலிருந்து ஐந்து தினமும் சாப்பிட்டால் உடலும், மனமும் வலிமையாகும், நாவில் தீய வார்த்தைகளும் வராது, சொன்னது பலிக்கும். சுபிட்சமான வாழ்க்கை அமையும்.












Click it and Unblock the Notifications