சிவன் கோயில்களுக்கு எந்தெந்த கிழமைகளில் செல்ல வேண்டும்? அமாவாசையில் தரிசித்தால் என்னவாகும்?
சென்னை: சிவன் கோயில்களுக்கு எந்தெந்த நேரங்களில் எந்தெந்த கிழமைகளில் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியுமா? இது போன்ற சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களுடன் சிவனை வழிபட்டால் மங்காத செல்வமும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்ய
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சிவன் கோவிலுக்கு செல்லும் நேரமும், பலன்களும் :
* ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் விலகி, தைரியம் ஏற்படும்.
* திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகள் மாறும் .

* செவ்வாய்கிழமை எமகண்ட நேரத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும் .
* புதன்கிழமை சிவ பெருமானை முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில் மற்றும் வேலையில் வளர்ச்சி, உயர் பதவி கிடைக்கும் .
* வியாழக்கிழமை இரவு கடைசி தரிசனம் (பள்ளியறைக்கு பெருமானை அனுப்புதல்) செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும் .
* வெள்ளிக்கிழமையும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும்.

* சனிக்கிழமை ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கர்மவினைகள் கலைந்து விடும்.
* நம்முடைய மனதால் , எண்ணத்தால் , வாக்கில் கீழ்கண்ட அஷ்ட சிம்மாசன நாமம் சொல்லலாம். இவற்றை சொல்லுவதாலும் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
1.ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நம
3.ஸ்ரீ ருத்ராய நம
4.ஸ்ரீ பசுபதே நம
5.ஸ்ரீ உக்ராய நம

6.ஸ்ரீ மகாதேவாய நம
7.ஸ்ரீ பீமாய நம
8.ஸ்ரீ ஈசானாய நம
இவைகளை சொல்ல முடியாவிட்டால் "சிவாய நம" என்று எளிமையான பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி வழிபடலாம். ஓம் சிவாய நம ஹ என அவர் தெரிவித்துள்ளார்.
-
குழந்தை வரம் வேண்டுவோர்.. வைகாசி விசாகம் நாளான்று இப்படி விரதம் இருந்தால் நல்லது! -
வைகாசி 2026: சுப முகூர்த்தங்கள், வாஸ்து நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் முழு பட்டியல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications