ரத சப்தமி 2025: எந்த ராசிக்காரராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்தால் வாழ்க்கையே டோட்டல் சேஞ்ச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத சப்தமி அன்று எளிமையான பரிகாரங்களை செய்தால் பாவங்கள் நீங்கி, வேலை, வருமானம், ஆரோக்கியம் உள்ளிட்டவைகளில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும். அப்படி என்ன பரிகாரம் என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் சப்தமி திதி வந்தாலும் தை மாதம் அமாவாசைக்கு பிறகு 7ஆவது நாள் வரும் வளர்பிறை சப்தமி திதி மிகவும் விசேஷமானதாகும். இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கிறோம்.

ratha saptami 2025 2025

அன்றைய தினம் ராஜ கிரகமான சூரியன் தனது 7 குதிரைகள் பூட்டிய தேரை வடதிசை நோக்கி செலுத்தும் நாள் ஆகும். வசந்த காலம் கோடை காலம் என அடுத்தடுத்து கால மாற்றம் இந்த நாளில் இருந்து ஏற்படும். இந்த ரத சப்தமி ஏழேழு ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் என கூறப்படுகிறது.

பஞ்சாங்கத்தின்படி தை மாதம் சுக்ல பட்சம் சப்தமி திதி பிப்ரவரி 4ம் தேதி காலை 6.37 மணிக்கு தொடங்கி மறுநாள் பிப்ரவரி 5 ஆம் தேதி காலை 04.30 மணிக்கு முடிவடையும். சூரிய உதயத்திற்குப் பிறகு திதி கணக்கிடப்படுகிறது என்பதால் ரத சப்தமி இன்று கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவான் ஆத்மாவுடன் தொடர்புடைய கிரகமாவார். அதனால் அவரை ரதசப்தமி அன்று வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும். ஜாதகத்தில் எப்படிப்பட்ட தசாபுத்தி நடந்தாலும் சூரியன் எந்த வீட்டில் இருந்தாலும் இனி நடக்கவே நடக்காது என்ற விஷயங்கள் கூட நல்லபடியாக நடக்கும்.

இதற்கு ரத சப்தமி அன்று சூரியனுக்கு ஒரு எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதை ரத சப்தமி அன்று செய்ய முடியாவிட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யலாம். அதிலும் சூரிய உதய நேரத்தில் செய்தால் நல்லது.

ரத சப்தமி அன்று எருக்கம் இலையை தலையில் வைத்து அதில் சிறிய அட்சதை வைத்து அது பின்புறமாக விழும்படி குளிப்பது நல்லது. பெண்களாக இருந்தால் எருக்கம் இலையுடன் மஞ்சள் வைத்து குளிக்கலாம். ரதசப்தமி அன்று சூரிய பகவானுக்கு ஆலயங்களில் நடக்கும் அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

ரத சப்தமி அன்று ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பால், மஞ்சள் கலக்க வேண்டும். அந்த பாத்திரம் பிளாஸ்டிக்காக இருக்கலாம். ஆனால் எவர்சில்வர், ஸ்டீல் பயன்படுத்தக் கூடாது. இந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீரை எடுத்துச் சென்று வெள்ளை எருக்கம் செடிக்கு அருகில் போய் ஊற்ற வேண்டும்.

அப்போது நாம் செய்த பாவங்களை மன்னித்து வாழ்க்கையில் பிரச்சினை தீர வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும்.

வெள்ளை எருக்கம் செடியை அடையாளம் காண முடியாதவர்கள், அந்த செடி தன் வீட்டருகே இல்லாதவர்கள் பச்சிரிசியுடன் வெல்லம் கலந்து கால் படாத இடத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பச்சரிசி மாவை ஒரு எறும்பு சாப்பிட்டாலும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

எனவே ரதசப்தமி நாளான இன்று எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் மேற்கண்ட பரிகாரத்தை செய்து வாழ்வில் வளத்தை பெறுங்கள். அருகில் உள்ள கோயிலுக்கு சென்று நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானை வெல்லலாம். இல்லாவிட்டால் வீட்டில் இருந்த படியே சூரியனை தரிசிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+