ஒரு ஜாதகத்தின் பலன்களை அறிய இந்த 32 விஷயங்கள் சரியா இருக்காணு பாருங்க!
சென்னை: ஒரு ஜாதகத்தில் இருக்கும் பலாபலன்களை அறிவதற்கு இந்த 32 குறிப்புகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அந்த ஜாதகம் முழுமையாக கணிக்கப்பட்டுள்ளதாக அர்த்தமாகிறது. அது என்ன 32 பாயிண்ட்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதுகுறித்து குவோரா இணையதளத்தில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சுமார் 30 வருஷத்துக்கு முன்னாடி ஜோதிடம் படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்த குறிப்புகள்...

ஒரு ஜாதகத்திற்கு பலன் நிர்ணயிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:
01. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி இயற்கை சுபரா - இயற்கை அசுபரா என்று பார்க்க வேண்டும்.
02. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி லக்கினத்திற்கு ஆதிபத்திய சுபரா - ஆதிபத்திய அசுபரா என்று பார்க்க வேண்டும்.
03. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி லக்கினத்திற்கு எந்தந்த வீட்டுக்கு அதிபதி என்று பார்க்க வேண்டும்.
04. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி லக்கினத்திலிருந்து எந்த பாவகத்தில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
05. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி திரிகோணம் என்று சொல்லக்கூடிய 01-05-09 அதிபதிகளுடன் சேர்ந்திருகிறதா என்று பார்க்க வேண்டும்.
06. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி திரிகோணாதிபதிகளின் பார்வை பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
07. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி கேந்திரம் என்று சொல்லக்க்கூடிய 01-04-07-10 அதிபதிகளுடன் சேர்ந்திருக்கிறத என்று பார்க்க வேண்டும்.
08. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி கேந்திர அதிபதிகளின் பார்வை பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 05. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி 06-08-12ம் வீட்டில் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
09. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி 06-08-12ம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
10. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி 06-08-12ம் வீட்டு அதிபதிகளின் பார்வை பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
11. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதியின் பலத்தை நிர்ணயிக்க வேண்டும்.
12. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி உச்சம் - மூலத்திரிகோணம் - ஆட்சி - நட்பு - சமம் - பகை - நீசம் போன்ற வகைகளில் எந்த் நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
13. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதியுடன பாதாகாதிபதிகள் சேர்ந்துள்ளனரா என்று பார்க்க வேண்டும்.
14. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதியை பாதகாதிபதிகள் பார்க்கின்றனரா என்று கவனிக்க வேண்டும்.
15. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவகாதிபதி வக்ர கதியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
16. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி அஸ்தமனம் அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
17. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவகாதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
18. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி திதி சூன்ய ராசியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
19. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி அசுப கிரகங்களுக்கு நடுவில் அமர்ந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். (பாவ கர்த்தாரி யோகம்).
20.ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவகாதிபதி பாசகர் - போதகர் - காரகர் - வேதகர் போன்ற நிலைகளில் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
21. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி பிற கிரகங்களுடன் சேர்ந்து எந்த விதமான யோகத்தினை (சுப யோகம் - அவ யோகம்) தருகிறது என்று பார்க்க வேண்டும்.
22. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி காரகோ பாவ நாஸ்தி நிலையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
23. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதியுடன் சேர்ந்த பார்த்த கிரகங்களின் காரகத்துவம் பாவ காரகத்துவம் சேர்த்து பார்க்க வேண்டும்.
24. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி வேறு கிரகங்களுடன் பரிவர்த்தனை பெற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
25. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி நிற்கும் வீட்டுக்கு அதிபதி எந்த வீட்டில் நிற்கிறார் என்றும் அவருடைய பலம் என்ன என்று பார்க்க வேண்டும்.
26.ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி நவாம்சத்தில் எங்கு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
27. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி பின்னாஷ்டக வர்க்கத்தில் எத்தனை பரல்கள் பெற்று இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
28. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி சர்வாஷ்டக வர்க்கத்தில் எத்தனை பரல்கள் பெற்று இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
29. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி இந்து லக்கினத்திலிருந்து எத்தனாவது பாவகத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
30. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி கேந்திராதிபத்திய தோஷம் பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
31. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவகாதிபதி எந்த நட்சத்திர பாதத்தில் நிற்கிறது என்று பார்க்க வேண்டும்.
32.ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாவகாதிபதி நிற்கும் நட்சத்திராதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications