வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் நன்மையா தீமையா? வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?
சென்னை: வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் என்ன அர்த்தம்? பொதுவாகவே பறவைகள் கட்டும் கூட்டை கலைக்கக் கூடாது என்பார்கள். அப்படியிருக்கும் போது வீட்டுக்குள்ளேயே புறாக்கள் கூடு கட்டினால் நல்லதா கெட்டதா என்பதை பார்ப்போம்.
பொதுவாகவே வீடுகளில் புறா, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் கூடு கட்டுவது இயல்பான ஒன்று. இந்து மதத்தில் செடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை தெய்வ அம்சம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சில விலங்குகள் (யானை, சிங்கம், புலி, குதிரை, பாம்பு, நாய், எலி), பறவைகள் (மயில், காகம், கருடன்) உள்ளிட்டவை தெய்வங்களின் வாகனங்களாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் முருகனுக்கு மயில் வாகனம், லட்சுமிக்கு ஆந்தை, விஷ்ணுவுக்கு கருடன், சனீஸ்வரனுக்கு காகம், துர்க்கைக்கு சிங்கம், ஐயப்பனுக்கு புலி, இந்திரனின் வாகனம் யானை, ஐய்யனாரின் வாகனம் குதிரை, பிள்ளையாருக்கு எலி, பைரவருக்கு நாய் வாகனம் என உள்ளது.
ஆபத்தை விளைவிக்கும் பாம்பு புற்றாகவே இருந்தாலும் அதை களைக்கக் கூடாது என்பதுதான் மனிதாபிமானம். அப்படியிருக்கும் சூழலில் புறா கூடு கட்டினால், அது குஞ்சு பொரித்து, குஞ்சுகள் பறந்து தானே இரை தேடும் வரை அந்த கூட்டை களைக்கக் கூடாது. இது பாவத்தை தரும் என்பார்கள். மேலும் குடும்ப ஒற்றுமைக்கும் பங்கம் விளைக்கும்.
அப்படிப்பட்ட சூழலில் புறாக்கள் தேவர்களின் ரூபமாக பார்க்கப்படுகிறது. ரிஷிக்களின் மறுஉருவமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் புறாக்கள் லட்சுமிதேவியின் அம்சம் என்றும் கூறப்படுகிறது. எனவே அவை வீட்டில் கூடு கட்டினால் துரதிருஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றும் என சொல்லப்படுகிறது.
மேலும் புறாக்களுக்கு உணவும் தண்ணீரும் அளிக்க வேண்டும். இது வீட்டிற்கு செல்ல செழிப்பை தரும். அமைதியையும் தரும். எனவே வாஸ்துபடி பறவை கூடு கட்டுவது மிகவும் மங்களகரமானது. எனவே எந்த கூட்டையும் அழிக்காதீர்கள். புறாவிறகு கூரைகளில் உணவளிக்காமல் வீட்டின் முற்றத்தில் உணவளிக்க வேண்டும். இது ராகு கிரக தோஷத்தை நீக்கும். அதே நேரத்தில் புறாக்களின் எச்சங்கள் சுகாதாரத்திற்கும் நல்லதல்ல, ராகு கிரகத்திற்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
திருமணம் கைகூட புறாக்களுக்கு உணவளிக்க வேண்டும். எனவே வீட்டில் புறாக்கள் கூடு கட்டினால் அதிர்ஷ்டம். அதே நேரம் கூடே இல்லாமல் வீட்டிற்குள் புறாக்கள் வந்து சென்றால் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications