கோயிலில் அர்ச்சனை தட்டு மாறி போனால் அபசகுணமா? தேங்காய் சிதறி உடைந்தால் என்ன பலன்?
சென்னை: கோயிலில் அர்ச்சனை தட்டு மாறிவிட்டால் அபசகுணமா? நாம் வேண்டுதல் வைத்து செய்த அர்ச்சனை தட்டு வேறு யாருக்காவது சென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கோயிலுக்கு சென்றால் பலர் அர்ச்சனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்னும் பலர் அர்ச்சனை செய்யாமல் சுவாமியை கும்பிட்டுவிட்டு வந்துவிடுவார்கள். பலர் வீட்டிலிருந்தே தேங்காய், பூ, பழம் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து அர்ச்சனை டிக்கெட் வாங்கி அர்ச்சனை செய்வார்கள்.

குருக்கள் எல்லா அர்ச்சனை தட்டுகளையும் ஒரு சேர வாங்கி வந்து அதை சுவாமி முன்பு வைத்து அர்ச்சனை செய்வார்கள். பின்னர் மொத்தமாக கொண்டு இது யாருது , இது யாருடையது என கேட்டு அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
பக்தர்களும் தாங்கள் கொண்டு வந்த தட்டை அடையாளம் கண்டு வாங்கிக் கொள்வார்கள். ஆனால் கோயில் வாசலில் விற்கப்படும் அர்ச்சனை பொருட்கள் ஒரு பாலித்தீன் கவரில் போட்டு கொடுக்கப்படும். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது கூடைகளிலோ கொடுக்கப்படும்.
இது பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் இதை பலர் அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் இருக்கும். பொதுவாக அர்ச்சனை தட்டு வாங்கியதும் தேங்காய் நன்றாக இருக்கிறதா என பார்ப்பார்கள். இதனால் ஓரளவுக்கு தேங்காயை வைத்து அடையாளம் கண்டு தங்கள் அர்ச்சனையை வாங்கிக் கொள்வார்கள்.
என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் எப்படியாவது அர்ச்சனை தட்டு வேறு ஒருவருக்கு சென்றுவிடும். பொதுவாக அர்ச்சனை என்பது வேண்டுதல்களுடன் செய்வார்கள். இப்படி அர்ச்சனை தட்டு மாறுவதால் அந்த வேண்டுதல் பலிக்காதோ என பலர் வேதனை அடைவார்கள்.
எனவே அர்ச்சனை தட்டு மாறினால் அது அபசகுணமா என்பதை தெரிந்து கொள்ளலாம். தேங்காய் உடைவதை பார்த்தும் சிலர் சகுணம் புரிந்து கொள்வார்கள். தேங்காய் உடையும் போது சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு பெருகும்.
சிறியதாக வட்டமாய் உடைந்தால் நிதி நிலைமை நல்லப்படியாக இருக்கும். தேங்காய் சரிசமமாக உடைந்தால் இதுநாள் வரை பட்டதுன்பமெல்லாம் தேங்காய் உடைந்தது போல் பட்டென தீர்ந்துவிடும். அர்ச்சனை தட்டு மாறிவிட்டால் அதை அபசகுணமாக கருத வேண்டியது இல்லை.
அனைத்து வேண்டுதல்களும் இறைவனடி சேர்ந்து விடுகின்றன. தட்டு மாறினால் வேண்டுதல் நடக்குமா நடக்காதா என அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள். அர்ச்சனை தட்டில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தேங்காய், வெற்றிலை பாக்கு, விளக்கு, குங்குமம், விபூதி, சந்தனம், பழங்கள், தூபம், நவரத்தின கற்கள், மாலைகள், சங்கு, துளசி மாலை, கற்பூரம் உள்ளிட்டவைகளை அர்ச்சனை தட்டில் வைக்கலாம்.












Click it and Unblock the Notifications