இயேசுவுடைய உயிர்த்தெழுதல் தற்சயலாக நடந்ததா..? அல்ல..தேவ சித்தத்தின்படி நிறைவேறியது!
சென்னை: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை, உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் நான் உயிரோடு கூட இருக்கிறேன் என்று சொன்னவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே, அதின் சாட்சியாக இஸ்ரேல் தேசத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில், அவருடைய கல்லறையில் கல் புரட்டப்படியிருப்பதை இன்றும் பார்க்கமுடிகிறது. பூமியில் நடந்து வருகிற காரியங்களையும், இனி வரும் காரியங்களை தாம் செய்ய போவதை கிறிஸ்துவ வேதாகமத்தில் எழுதி வைத்திருப்பதையும், அவருடைய அநேக தீர்க்கதரிசிகளுக்கும் அதை முன்னமே வெளிப்படுத்தியிருப்பதை வேதபுத்தகத்தின் பல நிரூபங்களில் எழுதி இருப்பதை பார்க்கலாம். அப்படி முன் சொல்லப்பட்ட ஒன்று தான் அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் அவர் உயிரோடே எழுந்திருப்பர் என்று சில ஆயிரண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசின புத்தகங்களில் அதை தீர்க்கதரிசிகள் மூலம் முன் அறிவித்திருந்தார்.

வேத வாக்கியம் நிறைவேறிற்று
இயேசுவுடைய உயிர்த்தெழுதல் தற்சயலாக நடந்தது அல்ல, தேவ சித்தத்தின்படி நிறைவேறியது. இயேசு மரித்ததும், எல்லாம் முடிந்தது என்று, அவரை விரோதித்த மத தலைவர்களும், பொய் குற்றசாட்டு சாடினவர்களும், வேதபாரகரும், பரிசேயரும், ஆசிரியரும், இயேசுவுடைய சரித்திரம் முடிந்ததாக நினைத்தார்கள். ஆனால் அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத்தேயு 28-6) என்ற வேதவாக்கியம் நிறைவேறிற்று. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன்னுடைய சீஷர்களுக்கு, மற்றும் அநேக ஜனங்களுக்கு தரிசனமாகினர்.
உயிர்தெழுதலின் நோக்கமும் முக்கியத்துவமும்
இயேசுவின் உயிர்தெழுதலில் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், அவர் எப்படி சிலுவையில் பாவத்தின் பெலனை ஆணியடித்து சிலுவையில் கொன்று, மரணத்தை ஜெயமாக விழுங்கினாரோ, நாமும் கூட பாவத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதே பிரதான நோக்கமாய் இருக்கிறது. ஆதாவது சரீரத்தில் செய்கிற பாவ சுபாவமாகிய விபச்சாரம், வேசித்தனம், காமவிகாரம், கொலை, கொள்ளை, திருட்டு, பொறாமை, ஆகிய செய்கைகளை விட்டு ஓய்ந்து (சிலுவையில் அறையவேண்டும்), நீதிக்கு பிழைக்க தக்கதாக, அன்பு, சமாதானம், நீதி, இச்சையடக்கம், நல்லொழுக்கம், கீழ்ப்படிதல், (உயிர்த்தெழுதல்) ஆகிய தெய்விக சுபாவங்களுக்கு உள்ளவர்களை இருக்கவேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார். மனிதன் பாவத்தை ஜெயிப்பது கடினம் என்பதனால் தானே சிலுவையின் மூலம் பரிகாரம் உண்டாயிற்று, இவற்றை செய்வது கூடாத காரியம், ஆனால் இயேசு சிலுவையில் சிந்தின குற்றமற்ற இரத்தத்தை விசுவாசிக்கும்போது, நாமும் கூட பாவ சுபாவத்திலிருந்து விடுதலை பெற்று, நீதிக்கு பிழைக்க முடியும். (மாற்கு 9:23) விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று எழுதியிருக்கிறதே.
ஈஸ்டர் முட்டைகள் (Easter eggs)
இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துதல் பகிர்ந்து மகிழ்கின்றனர். அதிலும் முட்டைகளில் வண்ணங்கள் பூசி, மற்றவர்களுக்கு கொடுக்கின்றனர். முட்டைகள் புதிய வாழ்வின் துவக்கத்திற்கு அடையாளமாய் இருப்பதுபோல, எல்லோருக்கும் புது துவக்கத்தின் வாழ்த்துதலை கூறுகின்றனர். முட்டையின் வெள்ளை ஓடு, வெள்ளை கரு, மஞ்சள் கரு என்பது ஆவிக்குரிய அர்த்தத்தில் மனிதனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய இம்மூன்றையும் குறிப்பதாகும். முட்டை உடைந்தால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு நஷடம் ஆகிவிடுவதுபோல, மனிதனுடைய சரீர பாவம் ஆவி, ஆத்துமா நஷடம் ஆகிவிடும், எனவே முட்டை எவ்வாறு பத்திரமாக கையாளப்படுகிறதோ, நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை உலக பாவத்தினால் கரை படாதபடி பாதுகாத்துக்கொள்ளவேண்டும். சரீரத்தில் செய்யப்படுகிற பாவம், அவனுடைய ஆவி, ஆத்துமாவில் கறைபட்டு, ஜீவியம் கெட்டுபோய்விடும். இவற்றை பாதுகாத்துக்கொள்ளவேன்றுமென்றால், அவருடைய சிலுவையில் மரித்ததையும், உயிர்தெழுதலையும் விசுவாசித்தால், நம்முடைய ஜீவியம் பாதுகாத்துக்கொள்ளப்படும்.
உயிர்தெழுதலின் பலன் நித்தியஜீவன்
இயேசுவின் உயிர்தெழுதலின் மிக முக்கிய பலன், அவரை விசுவாசித்த மனிதன் உலக வழக்கை முடிந்தபிறகு, (மரித்தபின்) அவனுடைய சரீரம் மண்ணில் புதைக்கப்பட்டு, ஆத்தும நித்திய நித்திய காலமாக தேவனோடு வாழ்வதுதான் அவனுக்கு கிடைக்கக்கூடிய பரிசு தான் நித்தியஜீவன்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications