சித்ரா பவுர்ணமி அன்று "இந்த 1 " தானத்தை செய்தால் 7 ஜென்மத்து பாவங்கள் குறையும்!
சென்னை: சித்ரா பவுர்ணமி தினத்தன்று ஒரு பொருளை தானமாக கொடுத்தாலே போதும் ஏழேழு ஜென்மத்து பாவங்கள் குறையும். புண்ணியங்கள் சேரும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இனியாவது சித்திரை மாதம் வரும் முழு நிலவில் இது போன்றதொரு தானத்தை கொடுங்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சித்ரா பவுர்ணமி அன்று இந்த 1 தானத்தை செய்தாலே போதும். ஏழேழு ஜென்மத்து பாவக் கணக்குகள் குறைக்கப்பட்டு, புண்ணியம் சேரும்.

நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை குறித்து வைக்கும் சித்ரகுப்தனுடைய பிறந்த நாள் தான் சித்ராபௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த சித்ரா பவுர்ணமி தின வழிபாட்டை சுலபமாக அவரவர் வீட்டில் எப்படி மேற்கொள்வது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
சுருக்கமாக சொல்லப்போனால் உங்களால் முடிந்த பிரசாதத்தை சித்ரகுப்தனுக்கு படைத்து, உங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து அந்த பிரசாதத்தை நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உண்ணுவது குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், நன்மையும் கொடுக்கும்.
சித்திரை மாதம் என்றாலே சூரியபகவான் உக்கிரமாகத் தான் இருப்பார். அதேபோல இந்த சித்திரை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் சந்திரபகவானும் பிரகாசத்தோடு தான் காட்சி தருவார். இந்த உலகம் இயங்குவதற்கு முழுமுதல் காரணமாக இருக்கும் சூரிய பகவான் சந்திர பகவான் இவர்கள் இருவரின் சக்தியும் இந்த பூமிக்கு அதிகமாக கிடைக்கப்படும் சித்திரை மாத பவுர்ணமி வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
சரி, இப்போது சித்ரா பவுர்ணமி அன்று நாம் செய்ய வேண்டிய தானத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். சித்திரை மாதம் என்பதால் கட்டாயமாக சூரியனின் தாக்கம் தற்போது அதிகமாக தான் இருந்து வருகின்றது. உங்களால் முடிந்த அளவு தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர், பழ வகைகள், குளிர்பானங்கள், நீர்மோர் போன்ற பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
முடியாதவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ, உங்கள் வீட்டு வெளிப்பக்கத்திலோ சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீரை வையுங்கள். அந்த தண்ணீரை தாகத்திற்காக கஷ்டப்படும் வாயில்லா ஜீவன்கள் குடித்தாலே உங்களுக்கு புண்ணியம் சேரும்.
அடுத்ததாக தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லுவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று பசியோடு இருக்கும் யாருக்காவது ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது நன்மையை சேர்க்கும். இறுதியாக இப்போது நாம் ஒரு தானத்தை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். மேல் சொன்ன தானங்களை உங்களால் செய்ய முடிந்தாலும் சரி, செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு தானத்தை மட்டும் செய்ய மறக்க வேண்டாம்.
சித்திரகுப்தனுடைய வழிபாட்டில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எது என்றால் நோட்டுப் புத்தகமும், ஒரு பேனா அல்லது பென்சில் தான். ஏனென்றால் நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை அவன் குறித்து வைப்பது நோட்டுப் புத்தகத்தில் தானே! இதுநாள்வரை நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் செய்த புண்ணிய கணக்குகளை மட்டும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் செய்த பாவ கணக்குகளுக்கான தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும், என்று சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு படிக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு நோட்டு, ஒரு பென்சிலை தானமாகக் கொடுப்பது நம்முடைய பரம்பரைக்கே புண்ணியத்தை சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டு அக்கம்பக்கத்தில் இருக்கும் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நோட்டு, பேனா அல்லது பென்சில் தானமாக வாங்கி கொடுங்கள். உங்களால் முயன்ற அளவு 3 பேருக்கு தானம் செய்யலாம். 11 பேருக்கு தானம் செய்யலாம். அது உங்களுடைய வசதியை பொருத்தது. ஆனால் சித்ரா பௌர்ணமி நாளில் நீங்கள் செய்யக்கூடிய இந்த ஒரு தானம், உங்களது ஏழு ஏழு தலைமுறைக்கும் புண்ணியத்தை சேர்க்கும். இவ்வாறு ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications