தப்பித் தவறிகூட கடிகாரத்தை "இந்த" திசையில் மாட்டாதீங்க.. ஊசல் கடிகாரம் மாட்டலாமா? வால்கிளாக் வாஸ்து
சென்னை: கடிகாரங்களை சுவற்றில் எப்படி மாட்டுவது? எந்த திசையில் மாட்டுவது? கடிகாரத்தின் சிறந்த நிறம் எது என்பது குறித்தெல்லாம் வாஸ்துவில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஒருசில டிப்ஸ்களை மட்டும் பார்ப்போம்.
வீட்டிலுள்ள பொருட்களை சரியாகவும், முறையாகவும் வைத்திருந்தாலே, பல பிரச்சனைகளை குடும்பத்தில் அண்டவிடாமல் தவிர்க்கலாம்.. அந்தவகையில் சுவர் கடிகாரமும் மிக முக்கியமானதாகும். தவறான திசையில் இந்த கடிகாரத்தை வைப்பதால், குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாகி, மன அமைதியும் குலைத்துவிடும். அத்துடன், உடல்நலக்கோளாறுகளுக்கும் வழிவகுத்துவிடும்.

சரியான நேரத்தை கடிகாரம் காட்டுவதுபோல, சரியான திசையில் கடிகாரத்தை வைக்க வேண்டும். ஒருசிலர், நிமிடங்களை அதிகமாக வைத்து கொள்வார்கள்.. 5 அல்லது 10 நிமிடங்கள் வேண்டுமானால் கூட்டி வைத்து கொள்ளலாமே தவிர, தாமதமாக அதாவது பின்னோக்கி ஓடவிடக்கூடாது. அப்படி பின்னோக்கி நேரம் ஓடுவது, எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து, தனவரவை குலைத்துவிடுமாம்.
வடக்கு திசை: அதேபோல, எப்போதுமே வடக்கு பக்கம் உள்ள சுவற்றில் உங்களுடைய கடிகாரத்தை மாட்ட வேண்டும். அதாவது, அந்த கடிகாரம் தெற்கு பார்த்த வாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராது. வடக்கு பக்கம் வட்ட வடிவில் கடிகாரங்கள் மாட்டினால் இன்னும் சிறப்பு. குபேரருக்கு உகந்த திசையாக கருதப்படும் வடக்கில் வைப்பது, வீட்டில் என்றென்றும் செல்வ வளம் நிறைந்திருக்க உதவும்.
வடக்கு திசையில் கடிகாரத்தை மாட்ட வசதி இல்லை என்றால், கிழக்கு திசையிலுள்ள சுவரில் மாட்டலாம். ஊசல் கடிகாரங்கள் எப்போதும் உயிர்ப்பு நிறைந்தவை என்பதால், கிழக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கலாம். இதனால், தனவரவு நன்றாக இருக்கும். காரணம், கிழக்கு திசை என்பது, குபேரனையும் உள்ளடக்கிய இந்திரனின் திசையாகும்.
கிழக்கு திசை: குடும்பத்தில் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால், கிழக்கு பக்கமுள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்ட வேண்டும்.. அப்போது கடிகாரம் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். வடகிழக்கு திசையிலும் நேர்மறை ஆற்றல் நிலவுவதாக நம்பிக்கை உள்ளது.
ஆனால் எக்காரணம் கொண்டும் கடிகாரத்தை தெற்கு சுவரில் மாட்டி வைக்கக்கூடாது.. இதனால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் ஆக்கிரமித்துவிடும்.. அதேபோல, வீட்டின் தென் பகுதியிலும் கடிகாரம் வைக்கக் கூடாது. படுக்கை அறையில் கதவிற்கு நேர் மேலேயும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. வாசலுக்கு வெளியே மாட்டக்கூடாது.. பால்கனி சுவற்றிலும் கடிகாரங்களை மாட்டி வைக்கக்கூடாது. வயது அதிகமானவர்களுக்கு கடிகாரத்தை எப்போதுமே பரிசாக தரக்கூடாது.
உடைந்த கடிகாரம்: வாஸ்துவின் படி நீலம், கருப்பு, ஆரஞ்சு நிற கடிகாரங்களை பயன்படுத்தாமல், வெளிர் நிறத்தில் கடிகாரத்தை சுவற்றில் மாட்டலாம்.. குறிப்பாக மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வைத்திருப்பது, நேர்மறை எனர்ஜியை தரக்கூடியதாம்.
அடிக்கடி கடிகாரத்தை துடைக்க வேண்டும்.. கடிகாரம் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.. கடிகாரம் உடைந்து, பழுதடைந்து இருந்தால் வீட்டில் வைத்திருக்க கூடாது.. உடனடியாக பேட்டரியை மாற்ற வேண்டும் அல்லது ரிப்பேர் சரிசெய்ய வேண்டும் அல்லது வீட்டிலிருந்து அப்பறப்படுத்திவிட வேண்டும்.












Click it and Unblock the Notifications