திருநள்ளாறு சனீஸ்வர கோயிலில் நவக்கிரக சன்னிதி இல்லாதது ஏன்? காளஹஸ்தியிலும் இல்லையே!
சென்னை: திருக்கடையூர், திருநள்ளார் உள்ளிட்ட கோயில்களில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிவன் கோயில் என்றாலே நவக்கிரகங்களும் இருக்கும். ஆனால் சில கோயில்களில் அவை இல்லை. இதற்கு ஒரு கதை உண்டு.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது என்பதை பற்றி விளக்கும் எளிய கதை

🌺 தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும்.
🌺நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்கள் கோளிலி தலங்கள் எனப்படுகின்றன.
🌺இத்தலங்களில் வணங்க எம வாதனை இருக்காது. வினைகள் அறும். முக்தி சித்திக்கும். எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது.
🌺திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் இல்லை. ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.
🌺திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவக்கிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
🌺ஸ்ரீவாஞ்சியம். இங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.
🌺திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.
🌺திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.
🌺திருக்கடையூர் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்
🌺காளஹஸ்தி. பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்க ஏணியில் ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
🌺இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தைக் குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதைத் தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.
🌺திருமழபாடி. திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.திருவெண்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர்.திருப்புறம்பியம். இங்கும் நவக்கிரகம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications