தப்பி தவறியும் அசைவம் சனிக்கிழமை சாப்பிடாதீங்க! இந்த பொருளை வாங்காதீங்க! சனி பகவான் அருளை பெற டிப்ஸ்
சென்னை: ஆன்மீகத்தில் மற்ற கிழமைகளைவிட சனிக்கிழமை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? சனிக்கிழமையன்று சில காரியங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்ல என்ன காரணம்? எந்தெந்த பொருட்களை வீட்டிற்கு அன்றைய தினம் வாங்கக்கூடாது என்பார்கள்? சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடலாமா? சனிக்கிழமைகளில் தெரியாமல் அசைவம் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வது? இவைகளை பற்றியெல்லாம் இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
சனிக்கிழமை என்பது சனி பகவானுக்குரிய நாளாகும். ஒருவரின் செயலுக்கேற்ப அவரது நன்மை தீமைகளை வழங்குபவர் சனி பகவான்தான்.. அதனால்தான் பலரும் சனி பகவானுக்கு பயப்படுகிறார்கள். அவரது கோபப் பார்வையிலிருந்தும் தப்பிக்க நினைக்கிறார்கள்.. எனவே, சனி பகவானுக்குரிய செயல்களை மட்டுமே சனிக்கிழமைகளில் செய்வது, அவரது நேரடியான அருளை பெற உதவும்..

உடுத்தக்கூடாத நிறங்கள்
உதாரணத்துக்கு, கருப்பு நிறம் சனி பகவானுக்கு உகந்ததாக கருதப்படுவதால், சனிக்கிழமையன்று கருப்பு நிறம் அணிந்தால் சனிபகவானின் அருள் கிடைக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது ஏழரை சனி உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட கருப்பு நிறத்தை அணியலாம்.. நீலநிறமும் அணியலாம்.
அதேபோல, சனிக்கிழமைகளில் ஒரு சிறிய நீலம் அல்லது கருப்பு துணியை பர்ஸில் போட்டு வைப்பது நல்லது. ஆனால் சனிக்கிழமைகளில் செவ்வாய் கிரகத்தின் நிறமான சிவப்பு நிற ஆடையை அணிய கூடாது.. சிகப்பு நிற பொருட்களையும் வாங்கக்கூடாது. எதிரெதிர் கிரகம் என்பதால், சனிக்கிழமைகளில் செவ்வாய் நிறத்தை தவிர்க்க சொல்கிறார்கள்.
வாங்கக்கூடாத பொருட்கள்
அதேபோல, இரும்பு பொருட்கள் சனிபகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருள் என்பதால், சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருளை வாங்கவே கூடாது.. இரும்பை அன்றைய தினம் பயன்படுத்தினால் குடும்பத்தில் மோதல்கள் வெடிக்கும்.. முடிந்தால் சனியன்று, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை பிறருக்கு தானம் தரலாம். இதனால் கடனிலிருந்தும் விடுபட முடியும்.
சனிக்கிழமைகளில் எண்ணெய், கல் உப்பு, எள் விதைகள், மாவு பொருட்களை வாங்கக்கூடாது.. நிலக்கரி, உப்பு, மர பொருட்களையும் தவிர்க்கலாம்.. தோஷம் இருப்பவர்கள், சனிக்கிழமையன்று, சுத்தமான செருப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்.
சனிக்கிழமை பால் பொருட்கள்
அதேபோல, சனிக்கிழமைகளில், பால் பொருட்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பார்கள்.. பால் பொருட்கள் சாப்பிட வேண்டி இருந்தால், அதில் மஞ்சள் அல்லது வெல்லம் கலந்து சாப்பிடலாம்.
அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.. அதிலும், சனிக்கிழமை அன்று விரதம் கடைபிடிப்பவர்கள், பெருமாளை வழிபடக் கூடிய நபர்கள் அன்றைய தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது என்கிறது ஆன்மீகம். சனி பகவான் அசைவ உணவை சாப்பிடுபவர்கள், அல்லது சமைப்பவர்களை தண்டிப்பாராம்.. அதனால்தான், இந்த நாளில் அசைவம் உண்ணக்கூடாது என்கிறார்கள்.
அசைவம் சாப்பிடலாமா?
இதற்கு அறிவியல் காரணங்களும் உள்ளன.. சனிக்கிழமைகளில் நிலவின் தாக்கம் பூமியின் மேல் அதிகம் இருக்கும் என்பதால் நமக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, இதுபோன்ற நேரங்களில், பூமியில் நிலவின் தாக்கத்தால் நம்முடைய செரிமான அமைப்பு லேசாக பலவீனமடைகிறதாம்.. எனவே, செரிமான பிரச்சனைகள் அதிகமாகி, உடல்நல தொந்தரவுகளும் ஏற்படலாம். அதனால்தான், சனிக்கிழமைகளில் அசைவம், பால் பொருட்களை அதிகம் சாப்பிடக்கூடாது என்று அறிவியல் காரணத்தையும் நம் முன்னோர்கள் அறிந்து கடைப்பிடித்து வந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications