அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்? ஆஞ்சநேயரை தவிர வேறு எந்த கடவுளுக்கும் கிடையாதாமே!
சென்னை: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன் சாத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த மாலைக்கான சக்தி என்ன என்பதையும் தெரிந்து கொண்டு இனி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி அவருடைய அருளை பெறுவோமாக!
பிள்ளையாருக்கு அருகம்புல், சிவனுக்கு வில்வம், பெருமாள், ஸ்ரீகிருஷ்ணருக்கு துளசி, அம்மனுக்கு வேப்பிலை, மகாலட்சுமிக்கு தாமரை, முருகனுக்கு அரளிப்பூ... அந்த வரிசையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது.

ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துவதும் செய்கிறார்கள். மேலும் வெண்ணெய்யாலும் அலங்கரிக்கிறார்கள். அதில் வெற்றிலை மாலைக்கான சக்தி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது இலங்கை அசோக வனத்தில் வைக்கப்பட்ட சீதையை கண்டுபிடிக்க ஆஞ்சநேயர் கிளம்பிச் சென்றார். அங்கு பல கட்ட போராட்டம், நீண்ட தேடுதலுக்கு பிறகு சீதையை அசோகவனத்தில் ஆஞ்சநேயர் கண்டுபிடித்தார்.
ஸ்ரீராமர் நலமுடன் இருப்பதாக சீதையிடம் ஆஞ்சநேயர் தெரிவித்தார். ராமர் தந்த மோதிரத்தை சீதாதேவியிடம் ஆஞ்சநேயர் வழங்கினார். இதனால் மிகவும் மகிழ்ச்சியுற்ற சீதாதேவி, பணிந்து வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசிர்வதிக்க வேண்டும் என விரும்பினார்.
அப்போது அட்சதைக்கான அரிசி, மலர்கள், மஞ்சள் என இல்லாததால் அருகில் இருந்த வெற்றிலை கொடியிலிருந்து வெற்றிலைகளை பறித்து ஆஞ்சநேயர் மீது தூவி ஆசிர்வதித்தார். பிறகு அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்கு சாத்தினார்.
அப்போது முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது வழக்கமானதாக கூறப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் வெற்றிலை மாலை சாத்தக் கூடாதாம். அதற்கு பதிலாக வெற்றிலை பாக்கு வைத்து தாம்பூலமாக வழிபடலாம்.
எப்போதும் வெற்றிலை மாலைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே கட்ட வேண்டும். காம்பு பகுதியை கிள்ளிவிட்டு நடுபகுதியில் பாக்கு வைத்து மாலையாக கட்டலாம். ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 9 வாரம் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வேண்டினால் வேண்டுவது எல்லாமே கிடைக்கும்.
இந்த வெற்றிலை மாலை சாத்துவதால் நவக்கிரகங்களின் தோஷங்களும் நீங்கும். சனி பகவானின் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம் என நம்பப்படுகிறது. இந்த வெற்றிலை, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
இந்த வெற்றிலை மாலையை சாத்தி ஜெய ஜெய ஸ்ரீராம், ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். பொதுவாக வெற்றிலை என்பது வெற்றியை தரக் கூடிய இலை ஆகும். அதனால்தான் அனைத்து விசேஷங்களிலும் வெற்றிலை முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. இது மங்கலத்தையும் குறிக்கிறது.
வெற்றிலை பாக்கு இல்லாமல் எந்த நல்லதும் கெட்டதும் நடத்தி முடிக்கப்படாது. வெற்றிலை மாலையை அனுமனின் மூல நட்சத்திரத்தின் போதும் அமாவாசை நாட்களிலும் அணிவிக்கலாம் என்கிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications