தினமும் தீபத் திரியை மாத்தணுமா? விளக்கேற்றும்போது இதை செய்யாதீங்க.. பூக்கள் இல்லாமல் பூஜை செய்யலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீடுகளில், விளக்கேற்றும் திரியை என்ன செய்யலாம் தெரியுமா? பூஜைக்கு பூக்கள் இல்லாவிட்டாலும் பூஜை செய்யலாமா? பூக்களுக்கு மாற்றாக வேறு பொருளை பயன்படுத்தலாமா? இதுகுறித்தும் ஆன்மீகத்தில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

எப்போதுமே விளக்கு எரிந்து முடிந்ததுமே, அதிலுள்ள திரிகளை தூக்கி போடாமல், திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விடுவது தான் நல்லது.

spirituality pooja lamp thread wick of deepam

எரிந்த திரிகள்: விளக்கு எரிந்து முடித்ததும், விளக்கை வாயால் ஊதக்கூடாது.. புஷ்பம் போன்ற பொருட்களை வைத்தே அணைக்க வேண்டும். அதேபோல ஒற்றை திரியாக போடாமல், 2 திரிகளை இணைத்து போட வேண்டும்... ஒருமுறை விளக்கேற்றிவிட்டால், அந்த திரியை பயன்படுத்தக்கூடாது. மறுநாள் விளக்கேற்றும்போது புது திரியை உபயோகப்படுத்த வேண்டும்.

அதேபோல, எரிந்த திரிகளை குப்பையில் வீசாமல், தினமும் மாற்றும் திரிகளை சேர்த்து வைக்கவேண்டும்.. ஓரளவு திரிகள் சேர்ந்ததுமே, வீட்டிலுள்ளவர்களை கிழக்கு பக்கமாக பார்த்து உட்கார வைத்து, அவர்களக்கு திருஷ்டி கழிக்கலாம். இறுதியில், திருஷ்டி கழித்த திரிகளை வீட்டு வாசலில் வைத்து கொளுத்திவிட வேண்டும். இதனால் வீட்டிலுள்ள துர்சக்திகள் தீயில் எரிந்து, நன்மை பிறக்கும்.

பூக்கள்: அதேபோல, பூஜை செய்யும்போது, கைகளினால் பூக்களை கிள்ளி பூஜை செய்யக்கூடாது. பூக்களை பாதியாக கிள்ளவும் கூடாது.. முழுபூக்களையே பயன்படுத்த வேண்டும். முல்லை, வில்வம், துளசி, செண்பகம், தாமரை, மரிக்கொழுந்து, மருதாணி போன்றவையெல்லாமே பூஜைக்கு உகந்த மலர்களாகும். ஜாதிப்பூ, தாழம்பூ, கதம்பமலர், அர்த்தராத்திரி போன்றவற்றை இரவு நேர பூஜைகளுக்கு பயன்படுத்தலாம். துலுக்க சாமந்திப் பூக்களை பூஜைக்கு ஒருபோதும் பயன்படுத்த கூடாது.

அதேபோல, மலராது என்று தெரிந்த மொட்டுகளையும் , காலில் மிதிக்கப்பட்ட புஷ்பங்களையும் பூஜைக்கு பயன்படுத்துதல் கூடாது... இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது.

சந்தனம்: பூஜைக்கு பூக்கள் இல்லாவிட்டாலும், 2 துளசி இலைகளை வைத்து பூஜை செய்யலாம். துளசி இல்லாவிட்டாலும், ஒரு கிண்ணத்தில் சந்தனம் சேர்த்து, அதில் பன்னீரை ஊற்றி கரைத்து பூஜை அறையில் வைத்து பூஜையை செய்யலாம்.

விளக்கேற்றும்போது, எண்ணெய் முழுவதுமே தீர்ந்துவிடக்கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. எண்ணெய் இல்லாமல் திரியும் கருகிவிடக்கூடாது.. விளக்கு தானாக அணையும்வரை விடாமல், எப்போதுமே கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது.. பூக்களால் தீபத்தை அணைத்துவிடலாம்.. அல்லது மலர்களை கொண்டு அணைக்கலாம்.

தவிர்க்கலாம்: விளக்கேற்றும்போது, தீப்பெட்டியில் நேரடியாக ஏற்றாமல், ஊதுபத்தியை பற்ற வைத்து, அதிலிருந்து விளக்கில் சுடரை பற்ற வைக்கலாம். அல்லது அகல் விளக்கை ஏற்றிக்கொண்டு, அதை வைத்து, தீபத்தை ஏற்றலாம். தீப்பெட்டிகள் பொதுவாக, நல்லதுக்கும் ஏற்றுவார்கள், கெட்டதுக்கும் ஏற்றுவார்கள் என்பதால், நேரடியாக தீப்பெட்டியை பூஜைகளில் பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.

அதேபோல விளக்கு ஏற்றிய திரியை எந்தக் காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது.... ஏனென்றால், விளக்குத்திரி கருகினால் வீட்டில் தொல்லைகள், பிரச்சனைகள் வரும் என்பார்கள்... ஒருவேளை எதிர்பாராத விதமாக திரி எரிந்துவிட்டால், அது முழுமையாக கருகிவிடாதவாறு, எண்ணெய் காலியாகும் முன்பு மலர்களால் தீபத்தினை அமர்த்தி விடவேண்டுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+