தங்கம் நகை வீட்டில் இருக்கா? தப்பித்தவறிகூட இப்படி வைக்காதீங்க..ஆமா, பெண்கள் கறுப்பு பொட்டு வைக்கலாமா
சென்னை: பெண்கள் தங்க நகைகளை எப்போது வாங்கலாம? பெண்கள் கருப்பு நிற பொட்டு வைக்கலாமா? அதிலும் திருமணமான பெண்கள் கருப்பு பொட்டு வைக்கலாமா? இதுகுறித்து சொல்லப்படும் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக, கருப்பு நிறங்கள், சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கி அழிக்கக்கூடியவை. மேலும், சனியின் நிறம் கருப்பு என்பதால், சனி கிரகத்துடனும், கருப்பு பொட்டு தொடர்புப்படுத்தப்படுகிறது. இந்த கருப்பு நிறத்தில் பெண்கள் பொட்டு வைப்பதை தவிர்க்க சொல்கிறார்கள்.

ஏனென்றால், கருப்பு நிறம் சனி மற்றும் ராகு இருவரது நிறமாகவும் கருதப்படுகிறது. அதனால், கருப்பு பொட்டுகளை பெண்கள் நெற்றியில் வைக்கும்போது, அது குடும்பத்திற்கு ஒவ்வாததாக கருதப்படுகிறது..
கருப்பு பொட்டு: பிரச்சனைகள், தகராறுகள் குடும்ப உறவுகளிடம் அதிகரிக்க செய்யுமாம். எனவே, திருமணமான பெண்கள், கருப்பு பொட்டு வைப்பது, எதிர்மறை சக்தியை ஈர்த்துவிடுவதாகவும், எனவே, கருப்பு நிற பொட்டுக்களை மணமுடித்த பெண்கள் தவிர்க்கவும் சொல்கிறார்கள்.
வெறுமனே கருப்பு பொட்டாக இல்லாமல், வேறு ஏதாவது நிறத்துடன் கலந்து பயன்படுத்தினால், எதிர்மறையான விளைவுகள் ஓரளவு குறையும்.. ஆனால், மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கருப்பு பொட்டு வைப்பதால், துஷ்ட சக்திகளை நெருங்க விடாமல் செய்யலாம். ஆனால், கோயில்களில் விளக்குகளில் காணப்படும் கருப்பு கரியை பொட்டாக வைத்து கொள்ள கூடாது. குழந்தைகளுக்கு திருஷ்டிக்காக கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கலாம்.
தங்க நகைகள்: அதேபோல பெண்கள் தங்க நகைகள் ஏதாவதொன்றை அணிய வேண்டும் என்கிறார்கள்.. காரணம், மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும். தங்க நகை அணிவதன் மூலம் வெப்ப நிலையை கட்டுக்குள் வைக்க முடியும். ரத்த நாளங்களை சீராக்குகிறது... தங்க நகை அணிவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி, நரம்புகள் வலுவாகிறது. தங்க மூக்குத்தி அணிந்து கொண்டால், குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்க செய்கிறது. 'கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகிறது. காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் காதில் தங்க நகை அணிவதால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.
எனவே, வீடுகளில் தங்க நகைகளை வைப்பதில்கூட திசைகளை கவனிக்க வேண்டும். வாஸ்துப்படி, தங்கத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைத்தால், வீட்டில் தங்கம் அதிகரிக்க செய்யும் என்கிறார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்க வேண்டும். நகைகள் இருக்கும் லாக்கர் வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.. இந்த லாக்கர் இருக்கும் அறையின் சுவரின் நிறமும், மஞ்சள் நிறத்திலேயே இருக்க வேண்டும்.
கால் ஆபரணம்: ஆனால், தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது. கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும்.
அதேபோல, தங்கத்தை மோதிரத்தை, மோதிர விரலில் அணிவதால் ஆன்மிக சக்தியை பெற முடியும் என்கிறார்கள்.. இதனால், மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை போன்றவை அதிகரிப்பதுடன், தீய சக்திகளால் ஏற்படும் தடைகளும் மெல்ல விலகும். எனவே, பெண்கள் தங்க மோதிரத்தை இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிய வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications