ஜியோ விலை ஏற போகுது.! டிராய் அமைப்புக்கு பறந்த லெட்டர்! "மீண்டும் மீண்டுமா.." பொதுமக்கள் அதிர்ச்சி
மும்பை: ஜியோ நிறுவனத்தின் ரீசார்ஜ் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயர்த்தப்பட்டது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விலையேற்றத்திற்குப் பிறகு கணிசமான அளவுக்கு யூசர்கள் ஜியோவை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதற்கிடையே இப்போது ஜியோ மற்றொரு விலையேற்றத்தைக் கொண்டு வரப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் முக்கிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ இருக்கிறது. இப்போது நாட்டில் அதிகபட்ச யூசர்களை கொண்ட டெலிகாம் நிறுவனமாக ஜியோ தான் இருக்கிறது.

ஜியோ:
கடந்த ஜூலை மாதம் தான் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி இருந்தது. ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது மட்டுமின்றி, அன்லிமிடட் 5ஜி சேவையிலும் கூட சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இது யூசர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்டண உயர்வு நடந்து சில மாதங்கள் தான் ஆகும் நிலையில், ஜியோ மற்றொரு ஷாக் கொடுக்கவுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த காலங்களில் இந்தியாவில் இரு முக்கிய டிவி நெட்வொர்க்குகளாக ஸ்டார் மற்றும் வயாகாம் 18 இருந்தன. இதில் ஹாட்ஸ்டார் உள்ளிட்டவற்றைக் கொண்ட ஸ்டார் நெட்வொர்க் சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்னி நிறுவனத்திற்குச் சொந்தமானது. அதேபோல ஜியோ சினிமாஸ் உள்ளிட்ட ஓடிடி பிளாட்பார்ம்கள் வயாகாம் 18 வசம் இருந்தது.
ஜியோ ஸ்டார்:
சர்வதேச அளவில் டிஸ்னி நிறுவனத்திற்கு நிதி சிக்கல் ஏற்பட்டதால், இந்தியாவில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் போடப்பட்டன. ஜியோ ஸ்டார் என்ற பெயரில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். இதற்குத் தேவையான அனுமதிகளும் கிடைத்துவிட்ட போதிலும், இதுவரை இரு நிறுவனங்களின் சேனல்கள் தனித்தனியாகவே இயங்கி வருகிறது. விரைவில் அவை சேர்ந்து இயங்க தொடங்கும் எனச் சொல்லப்பட்டது.
அதன் முதல்படியாக இப்போது ஜியோ ஸ்டார் சார்பில் இரு தரப்பு நிறுவனங்களையும் இணைத்து புதிய டிவி பேக் திட்டங்களை அறிவிக்கவுள்ளது. இதற்காக டிராய் அமைப்பின் அனுமதி கோரி ஜியோ ஸ்டார் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே மொத்தம் 134 சேனல்கள் உள்ள நிலையில், பல வகைகளில் அதைப் பிரித்து மொத்தம் 83 பேக்குகளை அறிமுகப்படுத்த ஜியோ ஸ்டார் திட்டமிட்டு இருக்கிறது.
மீண்டும் விலை ஏற போகுது:
இதற்கு அனுமதி கோரியே இப்போது ஜியோ ஸ்டார் விண்ணப்பித்துள்ளது. இதில் இந்தி அடிப்படை எஸ்டி பேக் விலை ரூ.110ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது இருக்கும் ஸ்டார் இந்தியா மற்றும் Viacom18இன் தனித்தனி இந்தி பேஸ் பேக்குகளின் ஒருங்கிணைந்த விலையை விட 18% அதிகமாகும்.
தமிழில் ஸ்டார் விஜய், விளையாட்டில் இந்திய அணியின் பல முக்கிய தொடர்களுக்கான உரிமை இந்த ஜியோ ஸ்டார் வசமே வரும். இதனால் மக்கள் இனி 18% கூடுதல் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்க முடியும். நான் டிவி எல்லாம் பார்ப்பது இல்லை.. எல்லாம் ஓடிடி தான் என நீங்கள் சொல்லலாம்.. டிவி பேக் கட்டணத்தைத் தொடர்ந்து இந்தாண்டு ஜியோ சினிமாஸ் ஓடிடியிலும் இணையும் நிலையில், ஓடிடி விலை கூட உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications