சார்ஜ் ஆகும் மொபைல் திடீரென வெடித்தது.. ஒட்டுமொத்த வீடும் நாசம்! வெளியே பறந்த கார் கண்ணாடிகள்! பகீர்
நாசிக்: சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த மொபைல் திடீரென வெடித்துச் சிதறியதில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. வெளியே கார் பார்கிங்கில் இருந்த கார் கண்ணாடி கூட இதில் வெடித்துச் சிதறியது. நாம் எந்தளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.
இந்த காலத்தில் மொபைல்கள் கிட்டதட்ட நமது 6வது விரலைப் போலவே மாறிவிட்டது. மொபைல்கள் இல்லாமல் இப்போது நம்மால் எதையும் செய்ய முடிவதில்லை. மொபைலை மறந்து வீட்டில் வைத்துவிட்டாலே நமக்குப் பதற்றம் தோற்றிக் கொள்கிறது.

அதேநேரம் மொபைல்களில் சில பிரச்சினைகளும் இருக்கிறது. சார்ஜ் போடும் போது எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதில் சில உயிரிழப்புகளும் கூட அரங்கேறி இருக்கிறது.
வெடி விபத்து: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிர நாசிக்கில் நடந்துள்ளது. அங்கே இருந்த சார்ஜ் போடப்பட்டிருந்த மொபைல் திடீரென வெடித்துள்ளது. அருகிலேயே பர்யூம் பட்டிலும் இறுக்க விபத்து மிக மோசமானதாக மாறியது. இதனால் வீட்டின் ஜன்னல் மட்டுமின்றி வெளியே கார் பார்கிங்கில் இருந்த கார் கண்ணாடிகளும் வெடித்துச் சிதறி இருக்கிறது.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவின் நாசிக் சிட்கோ உத்தம் நகர் பகுதியில் நடந்துள்ளது. அங்கே வீடு ஒன்றில் திடீரென மொபைல் வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர். போன் சார்ஜ் ஆகி கொண்டிருந்த போது அருகில் பர்யூம் பாட்டிலும் இருந்துள்ளது. பர்யூம்கள் பொதுவாகவே மிக எளிதாக தீப்பற்றக் கூடியது என்பதால் அந்த பாட்டிலும் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அது மிகப் பெரிய வெடிப்பாக மாறியிருக்கிறது.
சுக்கு நூறாக உடைந்தது: இந்த வெடிப்பில் வீட்டின் கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் சுக்கு நூறாக உடைந்துள்ளது. இது மட்டுமின்றி, வீட்டைச் சுற்றிக் குறிப்பிட்ட தூரத்தில் இருந்த அனைத்து ஜன்னல்களும் வெடித்துச் சிதறின. இந்த வெடி விபத்து எந்தளவுக்குக் கடுமையாக இருந்தது என்றால்.. வெளியே பார்கிங்கில் இருந்த கார் கண்ணாடிகளும் இந்தச் சம்பவத்தால் வெடித்துச் சிதறின. மேலும், இந்த வெடி விபத்தால் அக்கம் பக்கத்து வீடுகளில் ஜன்னல்கள் உடைந்து சுக்குநூறாக போய் இருக்கிறது.

இந்த வெடிவிபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொபைல் சார்ஜ் போடும்போது சில சமயம் ஓவர் ஹீட் ஆகி வெடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அப்போது பெரும்பாலும் அதன் தாக்கம் சில அடிகளைத் தாண்டி இருக்காது.
விசாரணை: ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக வெடி விபத்தில் சுற்றிலும் பல மீட்டருக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த வீட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சேதம் மிக மோசமாக இருக்கும் நிலையில், அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பேட்டரி பிரச்சனைகள் காரணமாகவே மொபைல்களில் தீ மற்றும் வெடி விபத்துகள் எப்போதும் ஏற்படுகின்றன. நவீன மொபைல்களில் பொதுவாக லித்தியம்- அயன் பேட்டரிகள் இருக்கும். பேட்டரிகள் மிகவும் பழையதாகும்போது அல்லது அதில் பிரச்சினை ஏற்படும் போது திடீரென அது ஓவராக சூடாகும். அதுபோன்ற நேரங்களில் இந்த வெடி விபத்து ஏற்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications