மனதில் நினைத்ததும் நகர்ந்த செஸ் காய்கள்.. கணினியை கண்ட்ரோல் செய்த மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர்
வாஷிங்டன்: மனித மூளைக்குள் சிப் பொருத்தப்பட்ட முதல் நபர், தனது சிந்தனைகள் மூலமே கணிணியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடு காட்சிகளை எலான் மஸ்க்கின் நியுரோலிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு விஞ்ஞானம் அசுரத்தனமாக வளர்ந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி முதல் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி வரை இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். தற்போது விஞ்ஞான உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலாக மனித மூளைக்குள் சிப் பொருத்தி சிந்தனைகளை உருவாக்கும் விதமான திட்டம் பரிசோதனையில் உள்ளது.

இந்த சோதனையை உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மருத்துவ உலகில் நரம்பியல் மருத்துவத்தில் சவாலாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அமையும் இந்த திட்டத்திற்கான பணிகளை தொடங்கியிருக்கிறது நியூரோலிங் நிறுவனம்.
எலான் மஸ்க் நிறுவனம்: மனிதனின் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் இணைப்பை உருவாக்கும் விதமாக 'சிப்' ஒன்றை மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை தொடங்கியிருக்கிறது எலான் மஸ்க்கின் நிறுவனம். அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் அமைப்பு கடந்த ஆண்டு இந்த சோதனைக்கு அனுமதி கொடுத்தது.
மூளையில் சிப் பொறுத்தப்பட்ட முதல் நபர்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குரங்குகளை வைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்திய நியூரோலிங் நிறுவனம் அதன் அடுத்தகட்டமாக மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனையை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க் மனிதர்களைக் கொண்டு சோதனை செய்ய அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அச்சோதனை நடைபெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது முதன்முறையாக மனிதருக்குப் பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சிப் பொருத்தப்பட்ட 29 வயது இளைஞர் நல்ல முறையில் உடல் நலம் தேறி வருவதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.
செஸ் கேம் விளையாடும் காட்சி: இந்த நிலையில், அந்த நபர் தனது மனதின் சிந்ததனைகள் மூலமே கணிணியை கட்டுப்படுத்தி ஆன்லைனில் செஸ் கேம் விளையாடும் காட்சிகளை நியூரோலிங் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. விபத்தில் சிக்கி நரம்பியல் செயல்பாடு பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிப் பொருத்தப்பட்ட பிறகு வீடியோ கேம்ஸ்கள், செஸ் போட்டிகளை விளையாடக்கூடிய திறனை பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நோலந்த் ஆர்பாக் என்ற நோயாளியின் மூளையில் தான் இந்த சிப் பொருத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த தொழில் நுட்பம் எனது வாழ்க்கையை ஏற்கனவே மாற்றிவிட்டது. அறுவை சிகிச்சையும் ரொம்பவே ஈசியாக இருந்தது" என்று கூறினார்.
நியூராலிங்க் என்றால் என்ன?: ஏஎல்எஸ் அல்லது கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன் மூலம் அவர்களது எண்ணத்தின் அடிப்படையில் கணினியின் கர்சர் மற்றும் கீபோர்டு கட்டுப்படுத்தப்படும். சுமார் ஆறு ஆண்டு காலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இப்போதே சோதனைகள் வெற்றிகரமாக நடந்தாலும் கூட இதுபோன்ற ஒரு 'சிப்' சந்தைக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிப் பொருத்துவதன் மூலம் அவர்களால் எழுந்து நடக்க முடியும். மட்டுமல்லாது மூளையிலிருந்து வரும் சமிஞ்சைகளை பயன்படுத்தி அவர்களால் கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்து இந்த சிப் மனித மூளையில் பொருத்தப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications