UPI பேமெண்டுகளில் வரும் மேஜர் மாற்றம்.. எல்லாமே மொத்தமாக மாறுது! வெளியான முக்கிய அறிவிப்பு
டெல்லி: நமது நாட்டில் இப்போது யுபிஐ மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே யுபிஐ பேமெண்டுகளை கையாளும் என்பிசிஐ அமைப்பு மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக யுபிஐ வருகைக்குப் பிறகு இது பல மடங்கு அதிகரித்துவிட்டது. யுபிஐ பேமெண்டுகளில் யாரும் ஒரு ரூபாய் கூடக் கூடுதலாகக் கட்ட தேவையில்லை என்பதால் இந்த பேமெண்ட் முறையில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

யுபிஐ பரிவர்த்தனைகள்
இதற்கிடையே வரும் ஜூன் 16ம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு யுபிஐ சேவைகளுக்கான ரெஸ்பான்ஸ் நேரம் குறைக்கப்படுவதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. யுபிஐ மூலம் பணம் அனுப்பும் செயல்முறையை ஸ்மூத்தாகவும் வேகமாகவும் மாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள்
அதன்படி ஜூன் 16ம் முதல் யுபிஐ யூசர்கள் ஒரு பரிவர்த்தனையின் நிலையைச் சரிபார்ப்பது அல்லது அதை ரிவர்ஸ் செய்யும் செயல்முறை வேகமானதாக மாறும். பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்கும் நேரம் 30 வினாடிகளில் இருந்து வெறும் 10 வினாடிகளாகக் குறைக்கப்படுகிறது. அதேபோல யுபிஐ பேமெண்ட்டை யாராவது ரிவர்ஸ் செய்ய விரும்பினால், அதற்கான ரெஸ்பான்ஸ் டைமும் 30 வினாடிகளுக்குப் பதிலாக 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. பணத்தை அனுப்புதல் அல்லது பெறுவதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 30 வினாடிகளில் இருந்து 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் தனது யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பணத்தை அனுப்புவது பெறுவது, பரிவர்த்தனை சரி பார்ப்பது, ரிவர்ஸ் செய்வது என அனைத்துமே இனி மின்னல் வேகத்தில் நடக்கும்.
எதற்காக இந்த மாற்றம்
இந்தியாவில் இப்போது யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. இதனால் யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கிகள் மற்றும் பேமெண்ட நிறுவனங்களும் தங்கள் சிஸ்டத்தை அப்டேட் செய்யுமாறு என்பிசிஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் பரிவர்த்தணைகள் தோல்வி அடைவது வருவது குறையும். மேலும், சக்சஸ் ரேட் அதிகரித்து, ரெஸ்பான்ஸ் நேரமும் குறையும்.
இது தொடர்பாக என்பிசிஐ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதுவே இந்த மாற்றங்களைச் செய்துள்ளோம். மேற்கூறிய ரெஸ்பான்ஸ் டைமிற்ஹுகள் எல்லா ரெஸ்பான்ஸும் இருக்க வேண்டும். அதை உறுதி செய்ய தேவையான அப்டேட்களை வங்கி மற்றும் பேமெண்ட் பார்ட்னர்கள் செய்ய வேண்டும். அதேநேரம் ரெஸ்பன்ஸ் டைம் குறைக்கப்படுவதால் பரிவர்த்தனைகளின் சக்சஸ் ரேட் பாதிக்கப்படக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ முடக்கம்
கடந்த மாதம் யுபிஐ முடங்குவது ஓரிரு முறை நடந்தது. இதனால் நாடு முழுக்க பல கோடி யூசர்கள் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படுவதை ஒப்புக்கொண்டிருக்கும் என்பிசிஐ அமைப்பு, அதைச் சரி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications